வெள்ளி, 14 அக்டோபர், 2011

மனோவின் ஆதரவு தேவையில்லை; நிபந்தனைக்கு ஐ.தே.க. அடிபணியாது

கொழும்பு மாநகரசபை நிர்வாகத்தை கொண்டுநடத்துவதற்கு மனோ கணேசனின் ஆதரவு எமக்குத் தேவையில்லை. ஜனநாயக மக்கள் முன்னணி யின் நிபந்தனைகளுக்கு ஒரு போதும் ஐக்கிய தேசியக் கட்சி அடிபணியாது. இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் யோகராஜன்.மக்களுக்காகப் பேரம் பேச மக்கள் சக்தி அவசியம் எனக் கூறி தேர்தல் பிரசாரம் செய்தவர்கள் இன்று தேசியப்பட்டியல் எம்.பி. பதவிக்காகப் பேரம் பேசுகின்ற னர் என்றும் அவர் கூறினார்.ரணில் விக்கிரமசிங்கவை துரோகி என விமர்சித்து வசைப் பாடியவர்கள் இன்று விழுந்தடித்துக்கொண்டு ஓடி வந்து சமரசம் பேசுவது ஏன்?  இதுதான் மக்களுக்காக பேரம் பேசுதலா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு மாநகரசபையைக் கைப்பற்றி னால், மனோ கணேசனுடன் பேரம் பேசாது என தேர்தலுக்கு முன்னர் யோகராஜன் எம்.பி. தெரிவித்திருந்தார்.ஆனால், தேர்தல் முடிவடைந்த பின்னர் கொழும்பு மாநகர சபையின் நிலையான ஆட்சிக்கு ஒத்துழைக்குமாறு மனோ கணேசனிடம் ஐ.தே.க. தலைமை பேச்சு நடத்தியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: