ஞாயிறு, 30 அக்டோபர், 2011

ராசாத்தியம்மாள்: அவனை அப்படியே இறங்கிப் போகச் சொல்லுங்க

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் டெல்லி விசிட் பற்றி கடந்த இதழில் விரிவாகவே எழுதியிருந்தோம். விடுபட்டுப் போன விஷயங்களைப் பற்றி மட்டும் சொல்கிறேன். சோனியாவை சந்திக்கப் புறப்பட்ட போது, காரில் தயாநிதி மாறனும் ஏறியிருக்கிறார். இதை கவனித்த ராசாத்தியம்மாள், ‘அவனை அப்படியே இறங்கிப் போகச் சொல்லுங்க...’ என்று கோபமாகச் சொன்னாராம்.
இதைக் கேட்டதும் உடன் வந்த டி.ஆர்.பாலுவே அதிர்ந்து போனாராம். தயாநிதி பாவம்... ரொம்பவே அப்செட் ஆயிட்டாராம்...’’
‘‘இன்னும் ராசாத்தி அம்மாளுக்கு தயாநிதி மீது கோபம் தீரலையா.?’
‘‘தன் மகள் ஜெயிலில் இருக்க அவர்தான் காரணம் என்று ராசாத்தி அம்மாள் நினைக்கிறார். அதை மாற்ற யாராலும் முடியவில்லை.
சோனியா வீட்டுக்குப் போனதும், ராசாத்தி அம்மாள் கண்ணீர் விட்டு அழுதாராம். ‘என் மகளை என்னிடம் திருப்பிக் கொடுங்கள்...’ என்று சொல்லி அழுததைக் கேட்டதும், சோனியாவே கண்கலங்கிவிட் டாராம். ‘உங்களின் மனநிலை எனக்குப் புரிகிறது. என்னால் முடிந்த உதவியை நிச்சயம் செய்கிறேன். அழாதீர்கள்’ என்று ஆறுதல் சொன்னவர், ஐந்து நிமிடத்தில் சந் திப்பை முடித்துக் கொண்டாராம்.’’

‘‘ஒரு தாயாக இருந்து பார்க்கும் போது கஷ்டம் புரியத்தானே செய்யும்... கருணாநிதி எதுவும் பேசவில்லையா?’’

‘‘சோனியாவிடம் நலம் விசாரித்ததோடு சரி... அதன் பின்னர் ராசாத்தி அம்மாளின் கண்ணீர் டி.ஆர். பாலுவைக் கூட பேச விடாமல் செய்துவிட்டதாம்.’’

‘‘டெல்லி க்ளைமேட் கருணாநிதிக்கு ஒத்துக் கொண்டதா?’’



‘‘கனிமொழிக்கு 24-ம் தேதியே ஜாமீன் கிடைத்துவிடும் என்றுதான் கருணாநிதி நினைத்தார். மகளுடன்தான் சென்னைக்குத் திரும்ப வேண்டும் என்று அவர் நினைத்திருந் தார். நீதிபதி ஏனோ 3-ம் தேதிக்கு தீர்ப்பைத் தள்ளி வைத்ததில் ரொம்பவே அப்செட்டாம். ஆனால் ராசாத்தி அம்மாள், ‘3-ம் தேதி வரை டெல்லியிலேயே தங்கியிருந்து மகளை அழைத்துச் செல்லலாம்...’ என்று சொன்னாராம்.’’

‘‘அப்புறம்...?’’

‘‘முதல்வராக இருந்தபோது கருணாநிதிக்கு நிறைய சலுகைகள் கிடைத்தது. தமிழ்நாடு இல்லத்தில் அவருக்கு அத்தனை வசதிகளும் இருந்தது. இப்போது தனியார் ஹோட் டலில் தங்குகிறார். அங்கு அவர் உடல் நிலைக்கு ஏற்றவகையில் வசதிகள் இல்லை. மேலும் டெல்லியில் மாறி மாறி நிலவும் தட்பவெப்ப நிலையும் அவருக்கு ஒத்துக் கொள்ளவில்லையாம். இதனால் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதாம்...’’

‘‘ஐயய்யோ...’’

‘‘அவரைப் பார்க்க வந்த அமைச்சர்கள் ஜெகத் ரட்சகன், பழனிமாணிக்கம் மற்றும் எம்.பி.க்கள், ‘சென்னைக்குப் போகலாம், தலைவரே’ என்று அழைத்திருக்கிறார்கள். இதைக் கேட்டதும் ராசாத்தி அம்மாள் ரொம்பவே டென்ஷன் ஆகிவிட்டாராம்... ‘நீங்கள் வேண்டுமானால் ஊருக்குப் போங்கள். அவரை ஏன் அழைக்கிறீங்க? அவர் இங்கிருந்து வருவது என்றால் மகளோடுதான் வருவார். ஒரு காலகட்டத்தில் உங்களுக்காக நான்தான் வாதாடினேன். இன்றைக்கு என் மகள் கஷ்டத்தில் இருக்கிறாள். அவளுக்காக நீங்கள் யாரும் கவலைப்படவில்லை. எல்லோரும் போங்க... என் மகளை தனியாளாய் நின்று எப்படி மீட்டுக் கொண்டு வரவேண்டும் என்பது எனக்குத் தெரியும்... எ ல்லோரும் போய் சந்தோஷமா இருங்க...’ என்று கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்துவிட்டாராம். அவரை சமாதானப்படுத்த முடியாமல் சிலர் அங்கிருந்து நழுவிவிட்டார்கள £ம். கருணாநிதியே சமாதானப்படுத்தி அவரை சென்னைக்கு அழைத்து வந்தாராம்...’’

thanks kumudam+raj trichy

கருத்துகள் இல்லை: