சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையைச் சேர்ந்தவர் இயக்குநர் பேரரசு. விஜய்யை வைத்து திருப்பாச்சி, சிவகாசி, விஜயகாந்த்தை வைத்து தர்மபுரி ஆகிய படங்களை இயக்கியவர்.
இவருக்கும், ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த சாந்திக்கும் கடந்த 2000ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு விருத்திகா என்ற பெண்குழந்தையும் உள்ளது.
பேரரசு உதவி இயக்குநராக இருந்தபோது இவர்களது திருமணம் நடந்தது. கல்யாணத்தின்போது சாந்தி வீட்டு சார்பில் வரதட்சணையாக நகை,பணம் கொடுக்கப்பட்டது. இருவரும் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.
பின்னர் பேரரசு இயக்குநராக மாறியதும், கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். சாந்தி தனது தாய் வீட்டுக்குச்சென்று விட்டார்.
2006 ம் ஆண்டு கணவருடன் தன்னை சேர்த்து வைக்கக் கோரி பவானி நீதிமன்றத்தில் சாந்தி வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின் போது அவர் சரியாக ஆஜராகாததால், ஒரு தலையாக தீர்ப்பு அளிக்கப்பட்டது. இருவருக்கும் விவாகரத்தும் வழங்கப்பட்டது.
அதன் பின்னர் 2007ம் ஆண்டு சாந்தி குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், தான் பழைய முகவரி கொடுத்ததால், வழக்கு விசாரணை தனக்குதெரியாமல் போய்விட்டது. எனவே விவாகரத்து வழங்கியது செல்லாது என அறிவிக்க வேண்டுமென குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், கணவரைப் பிரிந்து வாழ்வதால், தானும் மகளும் மிகுந்த சிரமப்படுவதாகவும், மாதந்தோறும் தனக்கு 10 ஆயிரமும், மகளுக்கு 5,000 ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் சாந்தி மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த பவானி கோர்ட், இயக்குநர் பேரரசு மனைவி,குழந்தைகளுக்கு மாதம் 15 ஆயிரம் ஜீவனாம்சம் தரவேண்டும் என்று தீர்ப்பளித்தது.
பவானி நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து பேரரசு, உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுதந்திரம், ‘’பவானி கோர்ட் அளித்த தீர்ப்பையே வழங்கினார். ஜீவனாம்சம் தர உத்தரவிட்டார். பேரரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக