விக்கிரமசிங்கபுரத்தில் வாங்க விளையாடலாம்-2010 நிகழ்ச்சியை முன்னிட்டு பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் நேற்று துவங்கிய மராத்தான் ஓட்டத்தை நெல்லை சரக டி.ஐ.ஜி சண்முகராஜேஸ்வரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.விக்கிரசிங்கபுரம் ஸ்போர்ட்ஸ் லவ்வர்ஸ் அசோசியேஷன் சார்பில் வாங்க விளையாடலாம்-2010 என்ற விளையாட்டு திருவிழா நேற்று துவங்கியது. விழாவை முன்னிட்டு நேற்று காலை சுமார் 7.30 மணியளவில் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் மராத்தான் ஓட்டம் துவங்கி பி.எஸ்.டபுள்யு.ஏ மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் முடிவடைந்தது.மராத்தான் ஓட்டப் பந்தயத்தை நெல்லை சரக டிஐஜி சண்முகராஜேஸ்வரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி முதல்வர் முருகன் முன்னிலை வகித்தார். மராத்தான் ஓட்டத்தில் சுமார் 3 ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சேவியர் ஜோதிசற்குணம், அம்பாசமுத்திரம் டி.எஸ்.பி.முத்துசங்கரலிங்கம், விக்கிரமசிங்கபுரம் ஸ்போர்ட்ஸ் லவ்வர்ஸ் அசோசியேஷன் ஒருங்கிணைப்பாளர் சேகர், ஸ்காட் விளையாட்டு துறை பொறுப்பாளர் மனோகரன் சாமுவேல், சிவந்திபுரம் பஞ்.,உறுப்பினர் பிராங்கிளின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.விழாவின் இரண்டாம் நாளான இன்று (31ம் தேதி) கபடி, கால்பந்து, கைப்பந்து, இறகுபந்து போட்டிகள் நடக்கிறது. இதனை தொடர்ந்து மாலையில் நடக்கும் பரிசளிப்பு விழாவில் சபாநாயகர் ஆவுடையப்பன், அமைச்சர்கள் மைதீன்கான், பூங்கோதை உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக