வியாழன், 11 ஏப்ரல், 2024

கோவையில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடேயே தான் போட்டி ... புலம்பித் தள்ளிய உடன் பிறப்புக்கள்

May be an image of 2 people and dais

நக்கீரன் : மட்டன் பிரியாணியை  எதிர்பார்த்து- கோவை திமுகவினர்...
மேற்கு மண்டலத்தில் வலுவான அ.தி.மு.க.விற்கு சம்மட்டி அடி கொடுப்பதற் காகவே, கோவையை கூட்டணிக்கு வழங்காமல் 1980க்கு பிறகு, அமைச்சர்கள் டி.ஆர்.பி. ராஜா, முத்துச்சாமி முன்னெடுப்பில் நேரடியாகவே உதயசூரியன் சின்னத்தில் களமிறங்குகின்றது தி.மு.க..
"கோவை நாடாளுமன்றத் தொகுதியில் கோவை வடக்கு, தெற்கு, சிங்காநல்லூர், சூலூர், கவுண்டம்பாளையம் மற்றும் பல்லடம் சட்டமன்றத் தொகுதிகளில் பல்லடம் மட்டும் திருப்பூர் மாவட்டம் வசம் உள்ளது. மொத்தமுள்ள ஆறு சட்டமன்றத் தொகுதியில் கோவை தெற்கு மட்டும் பா.ஜ.க. வசமும், மீதமுள்ளவைகள் அ.தி.மு.க. வசமும் உள்ளது.


எம்.பி. பதவிக்கான போட்டி என்பது தி.மு.க., அ.தி. மு.க.விற்கிடையே என்பதனைத் தாண்டி, பா.ஜ.க.வை குறிவைத்தே பிரச்சாரம் செய்கின்றார் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் சிங்கை ராமச்சந்திரன். மணல் விவகாரத்தில் மிரட்டி சம்பாதித்த பணத்தை வைத்துத் தான் கோவையில் வேட்பாளராக தாமரை கட்சி வேட்பாளர் நிற்கின்றார் என அறைகூவல் விட, " வாரிசு என்பதால் சீட் வாங்கியுள்ளார் அ.தி.மு.க. வேட்பாளர்'' என்கிறார் தாமரை கட்சி வேட்பாளர். என்ன தான் தாமரைக் கட்சி வேட்பாளர் தி.மு.க. பக்கம் தனது எதிர்ப்பைத் திருப்பினாலும், தன்பக்கம் இழுத்து அவரை வெளுத்து வாங்குகின்றார் அ.தி.மு.க. வேட்பாளர். தி.மு.க. தரப்பு வேட்பாளர் செய்ய வேண்டியதை அ.தி.மு.க. வேட்பாளர் செய்கின்றார் எனக் கேலி செய்வதும் கோவை தி.மு.க.வில் எதிரொலிக்கின்றது.
கோவை மாநகராட்சி வார்டுகளை உள்ளடக்கியது கோவை தெற்கு, வடக்கு மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதிகள். மாநகராட்சியின் 100 வார்டுகளின் செயலாளர்களையும், பகுதி கழக செயலாளர்களையும் அழைத்து அவிநாசி சாலையில் அமைக்கப்பட்ட தேர்தல் பணிமனையில் கூட்டம் நடத்தினார் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா. கூட்டத்தில் "கள நிலவரம் எப்படியிருக்கின்றது.? வெற்றி வாய்ப்பு உண்டா..? உங்களின் பங்களிப்பு என்ன.? என்கின்ற கேள்விகள் முன் வைக்கப்பட்டன. "மாநகராட்சி அதிகாரிகள் எங்களை மதிப்பதேயில்லை. இந்த வார்டில் இன்னன்ன தேவைகள் இருக்கின்றது என்றால் ஒருபோதும் நிறைவேறியதில்லை. அப்புறம் எப்படி வாக்கு கிடைக்கும்? மேயரிடம் கோரிக்கை வைத்தால் அதோ கதி தான்.!!! வார்டுக்காக குரல் கொடுத்தால், என் வீட்டு வேலையென என்னிடமே கமிஷன் கேட்கின்றார்கள்." என அனைவரும் புலம்பித் தள்ளியிருக்கின்றனர். ஒவ்வொன்றையும் வார்டு வாரியாக கவனமாக குறிப்பெடுத்துக் கொண்ட அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, "இது அத்தனையும் நிறைவேறும். நான் பொறுப்பு. அனைத்தையும் மறந்து தேர்தல் வேலைகளை பாருங்கள்'' என நம்பிக்கையளித்து அனுப்பி வைத்தார்.
உடனே முதற்கட்டமாக பகுதி கழக செயலாளர்களுக்கு ரூ.1 லட்சமும், பூத்திற்கு ரூ.10 ஆயிரமும், வார்டு செயலாளர்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்பட்டு வேலைகள் ஜரூராக்கப்பட்டுள்ளன. இருப்பினும், அமைச்சர் மட்டும் வேலை செய்து என்ன சார் புண்ணியம்.? உள்ளூர் பகுதிகளின் நெளிவு சுளிவுகள் மா.செயலாளர்களுக்குத் தானே தெரியும். வேட்பாளர் மீது என்ன மனக்குறையோ.? மா.செலிக்கள் பிரச்சாரத்திற்கு மட்டும் வருகிறார்கள், போகிறார்கள். அதன் பிறகு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. அப்புறம் எப்படி தி.மு.க.விற்கு வெற்றி வாய்ப்பு..?'' என்கிற புலம்பலும் அங்கிருக்கின்றது.
மா.செ-க்களை நம்பி புண்ணியமில்லை.! நாமளே களத்திலிறங்கி ஒவ்வொரு வி.ஐ.பி. மற்றும் சமூகத் தலைவர்களைப் பார்த்து வாக்குகள் கேட்பது என முடிவெடுத்து களத்திலிறங்கி, தொகுதியில் 1 லட்சத்திற்கும் குறைவில்லாமல் இருக்கும் கம்ம நாயுடு வாக்குகளை குறிவைத்து, தமிழ்நாடு கம்மநாயுடு சங்க நிர்வாகிகளை சந்தித்து இந்தியா கூட்டணியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமாருக்கு ஆதரவு திரட்டினார். அது போல், முக்குலத்து மக்கள் அதிகமிருக்கும் கோவை மாநகராட்சி 63வது வார்டு இராமநாதபுரம் பகுதியில் ஊர் பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவை திரட்டினார் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா. இதே வேளையில், ஸ்ரீ ரேணுகாதேவி கம்மவார் நாயுடு சங்கமோ, தாமரைக் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு என்றது. போதாக்குறைக்கு, கோவை தெற்கு தொகுதியில் ஆர்.எஸ்.புரம், சுக்ரவார்பேட்டை, தெப்பக்குளம் மைதானம் மற்றும் இடையர் வீதி ஆகிய பகுதிகளில் விரவிக்கிடக்கும் சேட்டுகள் வாக்கு களையும், வடக்குத் தொகுதியில் விரவிக்கிடக்கும் பிராமண சமூக வாக்குகளையும் கொத்தாக அறு வடை செய்துள்ளது தாமரைக் கட்சி.
கோவை நாடாளுமன்றத் தொகுதியின் முக்கிய வேட்பாளர் களில் தி.மு.க. வேட்பாளரும், பா.ஜ.க. வேட்பாளரும் கவுண்டர் சமூகத்தை சார்ந்தவர்கள். அ.தி.மு.க. வேட்பாளரோ நாயுடு சமூகத்தை சார்ந்தவர்.  
 சில வார்டுகளில் கட்சி ஆபீஸ் போடவில்லை என்றும், கனிமொழி பிரச்சாரத்திற்கு வரும் பொழுது நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை எனவும்  குற்றஞ்சாட்டுகின்றனர் சிலர்.
இதே வேளையில், மயூரா ஜெயக்குமார் கேட்ட தொகுதி கிடைக்கவில்லை என்பதால் காங்கிரஸும் தேர்தல் வேலைகளில் சுணக்கம் காட்டுவது காணக்கூடிய ஒன்று.
இது இப்படியிருக்க, கோவை தெற்குத் தொகுதி தவிர மீதமுள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளிலும் இறங்கி தீவிர களப்பணி செய்து வரு கின்றனர் அ.தி.மு.க.வின் ஐந்து எம். எல்.ஏ.க்களும். எனினும், வேலுமணி எதிர்வினை ஆற்றவும் வாய்ப்பு இருக்கின்றது என பரவலாக பேசப் படுவதால், சமூக வலைத்தளங்களில் தீவிரமாக களமாடி வாக்குகள் சேக ரித்து வருகின்றார் அ.தி.மு.க. வேட் பாளர் சிங்கை ராமச்சந்திரன்.
கோவையில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடேயே தான் போட்டி காணப்படுகிறது..
-- நக்கீரன்.

கருத்துகள் இல்லை: