சனி, 4 பிப்ரவரி, 2023

நளினி சிதம்பரத்தின் சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை. சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு

 மாலைமலர் :  புதுடெல்லி மேற்கு வங்காள மாநில தலைநகரான கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட சாரதா நிதி நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் கோடி ரூபாய் நிதியைப் பெற்று மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, அந்த நிறுவனத்தின் தலைவர் சுதிப்தா சென் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ. 42 கோடி செலவில் தொலைக்காட்சி சேனல் வாங்கும் விவகாரத்தில் சாரதா குழுமத்துக்கு சட்ட உதவிகள் வழங்கியதற்காக நளினி சிதம்பரத்திடம் அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ ஆகியவை விசாரணை நடத்தின.


இந்நிலையில், இந்த வழக்கில் நடந்த பண மோசடியில் நளினி சிதம்பரம், முன்னாள் எம்.எல்.ஏ. திபேந்திரா பிஸ்வாஸ், முன்னாள் அசாம் எம்.எல்.ஏ., அஞ்சன் தத்தா ஆகியோருக்கு தொடர்பிருப்பதை அமலாக்கத்துறை உறுதி செய்தது. நேற்று நடந்த விசாரணையை அடுத்து நளினி சிதம்பரத்தின் ரூ. 3.30 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

கருத்துகள் இல்லை: