வியாழன், 2 பிப்ரவரி, 2023

எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக அங்கீகரிக்க முடியாது: தேர்தல் ஆணையம்!

 minnambalam.com எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக அங்கீகரிக்க முடியாது: தேர்தல்
எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக அங்கீகரிக்க முடியாது: தேர்தல் ஆணையம்!
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக அங்கீகரிக்க கோரும் எடப்பாடி பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
கடந்த ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவை செல்லாது என்று அறிவிக்க கோரி ஓ பன்னீர்செல்வம் தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.


இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இடையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் நிலையில் தன்னை அதிமுக பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க கோரியும் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க கோரியும் மனுவில் எடப்பாடி பழனிசாமி கோரியிருந்தார்.

எடப்பாடி பழனிசாமியின் மனு மீது மூன்று நாட்களுக்குள் பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு கடந்த ஜனவரி 30 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ள தேர்தல் ஆணையம் தற்போதைய சூழலில் எடப்பாடி பழனிசாமியை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக அங்கீகரிக்க முடியாது என்றும் அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது

அதிமுக பொதுக்குழு வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் தற்போது எந்த முடிவும் எடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: