செவ்வாய், 9 ஆகஸ்ட், 2022

குடிகாரர்கள் வரிசையில் உத்தர பிரதேசம் முதலிடத்தில் அடுத்து கர்நாடகம் மத்திய பிரதேசம் மேற்கு வங்கம் தெலுங்கான ராஜஸ்தான் ...

ராதா மனோகர் : தேசிய குடிகாரரர்கள் வரிசையில் உத்தர பிரதேசம் முதலிடத்தில் 21.8
கர்நாடகம் இரண்டாவது இடத்தில் 20,6
மத்திய பிரதேசம் மூன்றாவது இடத்தில் 19.9
மேற்கு வங்கம் நான்காவது இடத்தில்  17,7
தெலுங்கானா ஐந்தாவது இடத்தில்  15.7
ராஜஸ்தான் ஆறாவது இடத்தில் 15.2
ஹரியானா ஏழாவது இடத்தில்  13. 7
ஆந்திர பிரதேஷ் எட்டாவது இடத்தில்    11.3
தமிழ்நாட்டின் குடிகார வீதம் வெறும் 5 .8 வீதமாகும்
உண்மை நிலைமை இப்படி இருக்கும்பொழுது சதா தமிழ்நாடு குடிகாரர் மாநிலம் என்று ஆரிய பார்ப்பன ஊடகங்களும் பிரமுகர்களும் பிரசாரம் செய்வது எவ்வளவு பெரிய மோசடி?

சரவணகாந்த்  : இந்த ஆரியகும்பலும், அதன் ஏவல்களும் அடிக்கடி சொல்வார்கள். திராவிடம் தமிழகத்தை குடிகார மாநிலமாக மாற்றியிருக்கிறது. அதன் வருவாயில் தான் அரசே ஓடுகிறது. வடக்கே பாருங்கள் தேனாறு ஓடுது, பாலாறு ஓடுது, கோமிய ஆறு ஓடுதுன்னு...
இங்க ரிசர்வ் பேங்க வெளியிட்ட அறிக்கை. ஒவ்வொரு மாநிலத்தின் வருமானம் பற்றிய ஒரு அறிக்கை. உங்க பாணியில் சொன்னால் அவங்க ஊர் டாஸ்மாக், அதாவது மக்களை குடிக்க வைத்து வரும் வருமானத்தை தெளிவாக சொல்கிறது.
இப்ப பேச சொல்லுங்க அந்த பொய் கும்பலை...
- சரவணகாந்த்

கருத்துகள் இல்லை: