வெள்ளி, 15 ஏப்ரல், 2022

இளையராஜா : அந்த காலத்து மோடிதான் அம்பேத்கர் இந்த காலத்து அம்பேத்கர் தான் மோடி!

May be an image of 2 people and text that says '神ன அம்பேத்கருக்கு நிகர் என மோடியை புகழ்ந்துள்ள இளையராஜா 'குழந்தைகளை காப்போம், குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற திட்டம் மற்றும் முத்தலா முறைக்கு எதிரான சட்டம் பெண்களின் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தை கண்டு அம்பேத்கரே பெருமைகொள்வார். இருவரும் இந்தியா பற்றி பெரிதாக கனவு கண்டவர்கள். செயலின் மீது நம்பிக்கை கொண்டவர்கள். இளையராஜா, "மோடியும் அம்பேத்கரும்: சீர்திருத்தவாதியின் சிந்தனையும், செயல்வீரரின் க்கையும் என்ற புத்தகத்திலிருந்து 09-02-2022 www.aransei.com'
Raja Rajpriya : புயலுக்கு எதிராக சங்கிகளுக்காக களம்மிறங்கியுள்ள ஞானி.  
இளையராஜா இசைஞானியாக இருக்கலாம், அவர் அங்கீகாரத்துக்காகவே சங்கியாக மாறியவர். இந்திய அரசாங்கத்தின் அதாவது இந்தியாவை மறைமுகமாக இயக்கும் அவாக்களின் அங்கீகாரம் வேண்டும் என விரும்பி சங்கி அவதாரம் எடுத்தவர், பின்பு ஆன்மீகவாதியாகிப்போனார். உலக அழகிகள் நிகழ்வுக்காக இசை அமைத்த இதே இளையராஜாதான், நாத்திகவாதி குறித்த படத்துக்கு இசையமைக்கமாட்டேன் எனச்சொல்லி தந்தைபெரியார் பற்றி எடுக்கப்பட்ட திரைப்படத்துக்கு இசையமைக்க மறுத்தார்.
ஒரு கலைஞன் தான் செய்யும் தொழிலில் சாதி, மதம் பார்க்கமாட்டான். திரைப்படத்துறை என்பது கூட்டு முயற்சியே. இளையராஜா, பெரியார் படத்திற்கு இசையமைக்க மறுத்ததற்கு காரணம், பெரியார் வெறுப்பாளர்களான, அந்த பெயரை கேட்டாலே உடல் முழுக்க எரியும் பார்ப்பனர்களுக்கு, பார்ப்பீனியத்துக்கு பிடிக்காது என்பதற்காகவே இசையமைக்க மறுத்தார்.
ரமணரின் தீவிர பக்தரான இளையராஜா, எனக்கு தெரிந்து கடந்த 30 ஆண்டுகளாக மாதம்தோறும் திருவண்ணாமலை வருபவர் ரமனாஸ்ரமத்தில் தான் தங்குகிறார். ரமணமாலை என்கிற பெயரில் தனி இசைஆல்பம் தயாரித்து, இசையமைத்து  வெளியிட்டவர், தமிழர்கள், திராவிடர்கள் மத்தியில் பெரும் புகழ்பெற்றவர் இங்கு கூஜாவாகவே நடத்தப்படுகிறார். இதை உலகம் முழுவதும்முள்ள ராஜாவின் பக்தர்கள் நம்பமாட்டார்கள், ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், ஆனால் அதுதான் நிஜம்.
காரணம் அவரின் சாதி.
ரமணர் ஆரிய பார்ப்பனர். ரமணாஸ்ரமத்தை ரமணரால் வாரிசாக நியமிக்கப்பட்ட அவரது குடும்ப உறவுதான் நடத்துகிறார். ரமணாஸ்ரமத்தை எல்லோரும் சாதாரண ஆஸ்ரமம் எனநினைக்கிறார்கள். இல்லை, அது பிறசாதி சாதனையாளர்களை அங்கீகரிக்கும் சாதிய மையம். இங்கு அங்கீகரம் பெற்றாள் உலகம் முழுவதும் அவாக்கள் ஏற்றுக்கொண்டு அங்கீகரிப்பார்கள். காஞ்சி சங்கரமடத்தின் வேலையை வெளியே தெரியாமல் நீண்ட ஆண்டுகளாக செய்துவருகிறது ரமணர் ஆஸ்ரமம்.
அந்த ரமணாஸ்ரமம் தான் ஓடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட பஞ்ஜமான்
என ஆரியர்களால் முத்திரை குத்தப்பட்ட சாதியில் பிறந்தவர் என்பதாலே இளையராஜாவை இன்னும் முழுவதுமாக அங்கீகரிக்கவில்லை. இந்த ஆரியக்கூட்டத்தின் முழுஅங்கீகாரத்துக்காக யார் காலையும் பிடிப்பேன் என்பது போலவே நடந்துக்கொள்கிறார். இளையராஜா.
உலகம் முழுவதும் அறிந்த ஆஸ்கார் விருது பெற்ற இசைப்புயல் என கொண்டாடப்படும் ஏ.ஆர்.ரஹ்மான், தன் செயல்கள் வழியாக, கருத்துக்கள் வழியாக சங்கி கும்பலை கதறவிடுகிறார். மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து தமிழர்கள் பக்கம் நிற்கிறார். இதை பொருத்துக்கொள்ள முடியாத சங்கி கும்பல் இசைஞாணி இளையராஜாவை பேசவைக்கிறது.
தனது தொழில் போட்டியாளரான, எங்கிட்ட கிடார் வாசிச்ச பையன் என நக்கலடித்த ஏ.ஆர்.ரஹ்மானை வெறுக்கும் இளையராஜா, ரஹ்மானின் சமூகநிலைக்கு எதிர்நிலை எடுத்துள்ளார். தான் விரும்பியது நடக்க தனக்கான அங்கீகாரம் அவாக்களிடம் வேண்டும் என்பதற்காக தமிழக, தென்னிந்திய மக்களால் வெறுக்கப்படும் பிரதமர் மோடியை போற்றி புகழ்கிறார். அதுவும் எப்படி புகழ்கிறார், பெருந்தலைவரான அம்பேத்காருடன் ஒப்பிட்டு புகழ்ந்துள்ளார். மோடி பிரதமர் என்பதற்காக யாரை யாருடன் ஒப்பிடுவது?.
குழந்தைகளுக்காக, இஸ்லாமிய பெண்களுகளின் உரிமைக்காக மோடி செயல்பட்டுள்ளார் என்கிறார்  இளையராஜா.
அந்த குழந்தைகளை பாதுகாத்து என்ன செய்யப்போகிறார்? 5 ஆம் வகுப்பு படித்து முடிக்கும் முன்பே நுழைவு தேர்வு, பின்பு 8 ஆம் வகுப்பில் நுழைவு தேர்வு, 12 ஆம் வகுப்பு முடித்ததும் கல்லூரியில் சேர நுழைவுத்தேர்வு. இதுதான் மோடியின் குழந்தைகளை காக்கும் லட்சணம்.
இஸ்லாமிய பெண்களை காத்துள்ளாறாம் மோடி?
குஜராத் முதலமைச்சராக இருந்தபோது இஸ்லாமியர்களுக்கு எதிரான மோடியின்  மதக்கொலைகளை செலக்டிவ்அம்னிஷீயாவால் நீங்கள் மறந்துயிருக்கலாம். இந்தவாரம் ராமநவமி ஊர்வலம் என்கிற பெயரில் வடஇந்தியாவில் ஊர்வலம் நடத்திய ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி போன்ற சங் பரிவார கும்பல், இஸ்லாமியர்களின் வியாபார கடைகள், தொழில் நிறுவனங்களை குறிவைத்து அடித்து நொறுக்கி எரித்துள்ளார்கள். இஸ்லாமியர்கள் இந்து பண்டிகை நடக்கும் இடங்களில் வியாபாரம் செய்யக்கூடாது என வெளிப்படையாக கர்நாடகாவில் மிரட்டுகிறது பாஜகவும், இந்துத்துவா அமைப்புகளும். இதற்கு பிரதமர் என்கிற முறையில் நீங்கள் புகழ்ந்த மோடி என்ன சொல்லியுள்ளார்?
இந்தியா குறித்து இருவரும் பெரிய கனவு கண்டார் என்கிறார் இளையராஜா.
அம்பேத்கர் கண்ட கனவு, இந்திய மக்கள் நல்வாழ்க்கை குறித்தும், சமஉரிமை குறித்தும், சாதி, மத ஏற்றத்தாழ்வு இல்லாத இந்தியா குறித்தும், சட்டம் அனைவருக்கும் சமம் என்பது குறித்து கனவு கண்டார்.
மோடி, மதவெறியராக தன்னைக்காட்டிக்கொண்டு முதல்வராக, பிரதமரானவர். 2014ல் இன்று மோடியை வசைப்படும் இந்தியர்களில் பெரும்பான்மையினர் மோடி பிரதமரானால் இந்தியாவில் பெரிய மாற்றம் வரும் என நம்பி வாக்களித்து பதவிக்கு வரவைத்தவர்கள்.
இன்றைய நிலைமையென்ன?
லட்சகணக்கான கோடிகளை பொதுத்துறை வங்கிகள் வழியாக அம்பானி, அதானி, மிட்டல், டாட்டா கும்பல்களுக்கு வாரி வழங்கவைத்து அதனை வராக்கடன் என தள்ளுபடி செய்த அதே மோடி, ஆர்.எஸ்.எஸ் கும்பல்தான், சில ஆயிரம் வங்கி கடன்களை ஏழை தொழிலாளி, விவசாயி கட்டவில்லை என்பதற்காக தற்கொலைக்கு தூண்டி தற்கொலை செய்ய வைத்தவர்கள்.
கார்ப்பரேட் வரியை குறைத்தவர்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை தறுமாறாக உயர்த்தி மக்களின் வயிற்றில் அடிக்கிறார். மத ரீதியாக மக்களை பிளக்கிறார், சிறுபான்மையின மக்களை வாழவிடாமல் பயமுறுத்துகிறார்.
அப்படிப்பட்ட மோடியை எப்படி அம்பேத்காருடன் ஒப்பிட முடிந்தது இளையராஜா? மோடியும், அம்பேத்கரும் என்கிற தலைப்பு கொண்ட புத்தகத்திற்கு முன்னுரை எழுதியுள்ளார் இளையராஜா. அதில்தான் அம்பேத்காரோடு மோடியை சமப்படுத்தியுள்ளார். அவரது தம்பி கங்கைஅமரனைப்போல் பாஜகவில் இணைந்துவிட்டு இதனை பேசியிருந்தால் யாரும் இளையராஜாவை விமர்சிக்கபோவதில்லை. இசைஞானி என தமிழகத்தில், தென்னிந்தியாவில் கொண்டாடப்படுபவர், மக்கள் மனநிலைக்கு எதிராக பேசியதால்தான் இந்த விமர்சனம்மே.
வயதானால் …………… புத்தி வந்துவிடும் என கிராமத்தில் சொல்வார்கள், அது அப்படியே இளையராஜாவுக்கு பொருந்துகிறது.

உரை இன் படமாக இருக்கக்கூடும்

கருத்துகள் இல்லை: