ஞாயிறு, 7 பிப்ரவரி, 2021

நடிகர் ரஜினிகாந்த் யாருக்குமே ஆதரவு தரபோவதில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது

 முற்றுப்புள்ளி

Hemavandhana tamil.oneindia.com சென்னை: வரும் சட்டமன்ற தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் யாருக்குமே ஆதரவு தரபோவதில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது..! 

உடல்நிலையை காரணம் காட்டி ரஜினிகாந்த் அரசியலில் இருந்து பின்வாங்கி கொண்டார்.. இந்த முடிவு அவரது ரசிகர்களைவிட, ரஜினியே நம்பிக் கொண்டிருந்த, ரஜினியை வைத்தே தங்கள் எதிர்காலத்தையும் நினைத்து கணக்கு போட்டுக் கொண்டிருந்த அவரது ஆதரவாளர்களுக்கு, தலையில் பெருத்த இடியாய் விழுந்தது. மற்றொரு புறம் கூட்டணிக்காக காத்திருந்த கட்சிகளுக்கும் ஏமாற்றத்தையே அளித்தது... அதிலும் பல வருடமாக காத்திருந்தது பாஜகதான்.. எத்தனையோ வகைகளில் ரஜினியை உயர்த்தி பிடித்தும், தாங்கி பிடித்தும் விருதுகளை தந்தும், அவரது ஆதரவை பெற முயற்சித்து வந்தது. அதாவது, குருமூர்த்தியை ரஜினியின் வாய்ஸை பெற முயற்சித்தது. ... 

இதற்கு நடுவில் கமல் ஒருபக்கம் உள்ளே நுழைந்து, "என் நண்பர் ரஜினியின் ஆதரவு எனக்குதான்" என்று விடாமல் சொல்லி கொண்டிருந்தார்.. கமலாவது ரஜினியுடன் தொடர்புடையவர், நண்பர்கள் என்பதால் அந்த உரிமையில் சொன்னார்.. ஆனால், இதில் சம்பந்தமே இல்லாமல் கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன் என்ட்ரி ஆனதுதான் ஷாக் ஆக இருந்தது.. ரஜினியின் ஆதரவை கோரும் என்று "காம்ரேடுகள்" பேசியது தமிழகத்துக்கே அதிர்ச்சியாகவே இருந்தது.

முற்றுப்புள்ளி எல்லாவற்றிற்கும் மேலாக அர்ஜுனமூர்த்தி, தான் ஆரம்பிக்க போகும் புது கட்சிக்கு ரஜினி ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும் என்று வெளிப்படையாகவே கேட்டார்.. இதனால், இந்த முறை ரஜினியின் வாய்ஸ் யாருக்கு ஆதரவாக ஒலிக்க போகிறது? இருக்கிற ஒரு வாய்ஸை எத்தனை பேருக்கென்று ரஜினி தருவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தபடியே இருந்தது.. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் இன்று முக்கியமான ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.


அதாவது, இந்த சட்டமன்ற தேர்தலுக்கு ரஜினி நிச்சயமாக 100 சதவீதம் வர மாட்டார் என்பதே அது. அதுமட்டுமல்ல, வரும் சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவும் அளிக்க மாட்டார், லதா ரஜினி கட்சி தொடங்குவதாக வரும் தகவல்கள் உண்மையில்லை என்றும், அர்ஜுனமூர்த்தி கட்சி தொடங்கினால் அதற்கும், ரஜினி மக்கள் மன்றத்திற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றும் நறுக்கென குறிப்பிட்டுள்ளார்... இதுதொடர்பாக ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுக்கும் போன் செய்து, சுதாகர் தகவலை தெரிவித்துள்ளார்.

நல்ல முடிவு ரஜினியின் முடிவை ஏற்று ரசிகர்கள் அனைவரும் உரிய முறையில் செயல்படுமாறும் அறிவுறுத்தினாராம். ரஜினி இப்படி ஒரு முடிவை எடுத்தது பாஜகவுக்காகவா? அல்லது அர்ஜுனமூர்த்திக்காகவா? தெரியவில்லை.. ஆனால் யாருடைய அதிருப்திக்கும் ஆளாகாமல் ரஜினி நல்ல முடிவை எடுத்திருப்பதாகவே அனைவரும் கருதுகிறார்கள்

கருத்துகள் இல்லை: