வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

ராஜஸ்தானில் திருப்பதியை மிஞ்சும் உண்டியல் வசூல்: பணத்தை எண்ணமுடியாமல் சோர்வடைந்த கோயில் ஊழியர்கள்!

திருப்பதியை மிஞ்சும் உண்டியல் வசூல்: பணத்தை எண்ணமுடியாமல் சோர்வடைந்த கோயில் ஊழியர்கள்!
tamil.news18.com:  திருப்பதியை மிஞ்சும் உண்டியல் வசூல்: பணத்தை எண்ணமுடியாமல் சோர்வடைந்த கோயில் ஊழியர்கள்! முதல் நாள் முடிவில் உண்டியலில் இருந்த 6 கோடியே 17 லட்சத்து பன்னிரெண்டாயிரத்து இருநூறு ரூபாய் எண்ணப்பட்டுள்ளது. இது தவிர 91 கிராம் தங்கமும், 4 கிலோ 200 கிராம் வெள்ளியும் உண்டியலில் இருந்துள்ளது. < ஸ்ரீ சன்வாலிய சேத் உண்டியலில் கோடிக்கணக்கில் பணம் வசூல் ஆனதால் அதனை எண்ண முடியாமல் கோவில் ஊழியர்கள் சோர்வடைந்ததுடன் பணம் எண்ணும் பணியை அடுத்த நாளைக்கு ஒத்திவைத்திருக்கும் சம்பவம் ராஜஸ்தானில் நடைபெற்றுள்ளது. உண்டியல் வசூலில் திருப்பதி ஏழுமலையான் கோவிலை மிஞ்சிவிடும் வகையில் இக்கோவிலின் வசூல் அமைந்துள்ளதாக கூறுகின்றனர்.

மத நன்கொடைகள் என வந்து விட்டால் அள்ளிக்கொடுப்பதில் நம்மவர்கள் சளைத்தவர்கள் அல்ல. நம்பிக்கையில் அடிப்படையில் தெய்வ வழிபாட்டிற்காக பணத்தை வாரிக் கொடுக்கும் நாடு முழுவதிலும் உள்ள கோவில்களில் ஒன்று தான் ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சன்வாலிய சேத்.

இக்கோவிலில் மாதம் முழுவதும் உண்டியலில் வசூல் ஆகும் பணத்தை அமாவாசைக்கு முந்தைய தினத்தில் எண்ணுவது வழக்கமாக உள்ளது. இதன் அடிப்படையில் நேற்றைய தினம் கோவில் உண்டியலை திறந்து பார்த்தனர். அதில் ஏராளமான பணம் இருப்பதை பார்த்த கோவில் ஊழியர்கள் பணத்தை எண்ணும் பணியை தொடங்கினர்.


இருப்பினும் உண்டியலில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததால் அதனை எண்ணும் பணியில் ஈடுபட்டவர்கள் சோர்வடைந்தனர். ஒரு நாளில் பணத்தை அவர்களால் எண்ண முடியாமல் போகவே இன்றும் உண்டியல் பணம் எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது.

முதல் நாள் முடிவில் உண்டியலில் இருந்த 6 கோடியே 17 லட்சத்து பன்னிரெண்டாயிரத்து இருநூறு ரூபாய் எண்ணப்பட்டுள்ளது. இது தவிர 91 கிராம் தங்கமும், 4 கிலோ 200 கிராம் வெள்ளியும் உண்டியலில் இருந்துள்ளது. இன்றும் உண்டியல் பணம் எண்ணப்பட்டு வருகிறது.

இதுவரை இல்லாத வகையில் அதிகப்படியான பணம் இம்முறை உண்டியல் வசூல் மூலம் இக்கோவிலுக்கு கிடைத்திருப்பதாக தெரியவந்துள்ளது.  பணம் எண்ணும் பணியை மாவட்ட ஆட்சியர் ரத்தன் குமார் சுவாமி, அறநிலையத்துறை தலைவர் கன்ஹைய தாஸ் வைஷ்னவ் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.பொதுவாக கோவில் உண்டியல் வசூலில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நிகராக எந்தவொரு கோவிலும் இல்லை என்றே கூறுவார்கள் ஆனால் ஒரு நாளில் எண்ண முடியாத அளவுக்கு பக்தர்கள் பணத்தை வாரி வழங்கியிருப்பது அனைவரையும் திரும்பிப் பார்க்கச் செய்திருக்கிறது.

கருத்துகள் இல்லை: