வெள்ளி, 31 ஜூலை, 2015

தினமலர்.: தே.மு.தி.க.,வை விட கூடுதல் 'சீட்'கள்: காங்கிரஸ் அதிரடியால் தி.மு.க அதிர்ச்சி ?

தமிழகத்தில், தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு அடுத்தபடியாக, பெரிய கட்சி நாங்கள் தான்' என, காங்கிரஸ் தரப்பில் சொல்லப்பட்டு வருவது, தி.மு.க., மேலிடத்தை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.இதுகுறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:தமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வை எதிர்க்க, பல கட்சிகளையும் ஒருங்கிணைத்து, வலுவான கூட்டணி ஒன்றை, தன் தலைமையில் அமைக்க வேண்டும் என, தி.மு.க., முயற்சிக்கிறது.அந்த அணியில், தே.மு.தி.க.,வையும், காங்கிரசையும் இணைக்க வேண்டும் என, திட்டமிட்டு, அதற்கான காரியங்களில், தி.மு.க.,வினர் இறங்கி உள்ளனர்.ஆனால், விஜயகாந்த் தரப்பு, தி.மு.க.,வினருக்கு பிடிகொடுக்கவில்லை. இந்நிலையில், 'தி.மு.க., கூட்டணியில் இடம் பிடிப்போம்' என்பது போல சொல்லி வந்த காங்கிரசார், சமீபத்தில், திருச்சியில், ராகுலை வரவழைத்து நடத்திய கூட்டத்திற்கு பின், தி.மு.க.,வுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக பேச ஆரம்பித்துள்ளனர்.  காங்கிரசில் தான் அனைவரும் தலைவர்களாக உள்ளனர்...தொண்டர்களை காணோம்...திமுகவில் கருணாநிதி ஸ்டாலின் உட்பட ஒரு 8 தலைவர்கள் தேறுவார்கள்...அதிமுகவில் அம்மா ஒருவர் மட்டுமே தலைவர்..சசிகலா துணை தலைவர்...காங்கிரசில் அப்படியா? எல்லாருமே தலைவர்கள் ...அப்போ அவர்கள் தானே பெரிய கட்சி..நியாயம் தான்..


காங்கிரசார் கூறுவதாவது: தமிழகத்தைப் பொறுத்தவரை, அ.தி.மு.க.,வை எதிர்க்கும், தி.மு.க.,வுக்குத் தான், வரும் சட்டசபை தேர்தல் வாழ்வா... சாவா பிரச்னை. ஆனால், காங்கிரசுக்கு அப்படியில்லை. தமிழகத்தில், தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு அடுத்த பெரிய கட்சி என்றால், அது காங்கிரசே.என்ன தான், தே.மு.தி.க., ஏற்கனவே பெற்ற ஓட்டுகளின் அடிப்படையில், மூன்றாவது பெரிய கட்சியாக காட்டப்பட்டாலும், அந்த கட்சி, லோக்சபா தேர்தலுக்கு பின், ரொம்பவும் சிதைந்துள்ளது. செயல்படாத இயக்கமாக உள்ளது; தொண்டர்கள் கடும் சோர்வடைந்து விட்டனர்.

ஆனால், காங்கிரஸ் அப்படி அல்ல; இன்றும், பாரம்பரிய ஓட்டுகளை தன்னகத்தே வைத்துள்ளது. தமிழக ஆளுங்கட்சி மற்றும் மத்திய அரசை எதிர்த்து காங்கிரஸ் மட்டுமே, வேகமாக அரசியல் செய்து வருகிறது. மக்களிடம், கட்சி எழுச்சியாக உள்ளது.அதனால், தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க.,வும், காங்கிரசும் இணையும் பட்சத்தில், தே.மு.தி.க.,வை விட, கூடுதல் எண்ணிக்கையில் காங்கிரசுக்கு, 'சீட்' ஒதுக்க வேண்டும். கட்சித் தொண்டர்களிடமும், இளங்கோவன், இதைத்தான் வலியுறுத்தி வருகிறார்.இவ்வாறு அவர்கள் கூறுகின்றனர்.

இதனால், தி.மு.க., தரப்பு, காங்கிரஸ் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளதோடு, காங்கிரசுக்கு பதிலாக, அங்கிருந்து பிரிந்து சென்ற, த.மா.கா.,வை கூட்டணிக்கு அழைத்து வரலாமா என, யோசிக்க ஆரம்பித்துள்ளது.இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

- நமது நிருபர் தினமலர்.com 

கருத்துகள் இல்லை: