இப்பகுதி மக்களுடன் பல்வேறு முறை போராட்டத்தில் பங்கேற்றுள்ளார் சசிபெருமாள். இந்நிலையில் இன்று, டாஸ்மாக் கடைகளை அகற்ற அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், 200 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தின் உச்சியில் ஏறிய காந்தியவாதி சசிபெருமாள் தீக்குளிப்பு போராட்டம் நடத்தப்போவதாக எச்சரித்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தீயணைப்பு
படையினரின் முயற்சியால் காந்திவாதி சசிபெருமாள் மீட்கப்பட்டார். 5
மணிநேரம் செல்போன் கோபுரத்தில் நின்று போராட்டம் நடத்தியதால் மிகவும்
உடல்நலன் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் மருத்துவனையில்
அனுமதிக்கப்பட்டார். ரத்த வாந்தி எடுத்து மயங்கிய சசிபெருமாள் மரணம்
அடைந்தார். nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக