வெள்ளி, 31 ஜூலை, 2015

பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு திட்டம்- மத்திய அரசு விரைவில் அறிவிப்பு

பஸ் நிலையம், ரெயில் நிலையம், பொது இடங்களில் பிச்சைக்காரர்கள் தொல்லை தாங்க முடிவதில்லை என பலரும் கூறி முகம் சுளிப்பது உண்டு. பிச்சைக்காரர்கள் பிச்சை எடுப்பதை கைவிட்டு, மறுவாழ்வு வாழத்தக்க விதத்தில் மத்திய அரசு திட்டம் ஒன்றை உருவாக்கி வருவதாக தெரிய வந்துள்ளது. டெல்லி மேல்–சபையில் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு பற்றி நேற்று எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகார வழங்கல் துறை ராஜாங்க மந்திரி கிருஷன் பால் குர்ஜார் பதில் அளித்தார். அப்போது அவர், ‘‘பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு தொடர்பாக மத்திய, மாநில அரசு பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள், தனிப்பட்ட நபர்கள் என பல தரப்பினரையும் கூட்டி, தேசிய அளவில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்த கூட்டங்களில், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுக்கு மத்திய திட்டம் ஒன்றை உருவாக்குவது பற்றி ஆராயுமாறு பரிந்துரை செய்யப்பட்டது’’ என கூறினார். தொடர்ந்து அவர், ‘‘அந்த பரிந்துரையின்படி, பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு, பராமரிப்பு, பாதுகாப்புக்கான மறுவாழ்வு திட்டம் ஒன்று உருவாக்கப்படுகிறது’’ என்று கூறினார். எனவே பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம் ஒன்றை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. nakkheeran.in


2 கருத்துகள்:

MatureDurai சொன்னது…

"பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு திட்டம்"

எங்கேயோ கேட்ட குரல் ? எப்போதோ கேட்ட குரல் ?

நமது கலைஞரிடமிருந்து எழுபதுகளில் கேட்ட குரல்தான் !

தமிழ் நாட்டில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுவிட்டது !

மற்ற மாநிலங்களுக்கு இனிதான் ஜென்ம சாபல்யம் !

இதிலும் தமிழகமே முன்னோடி !

பெயரில்லா சொன்னது…

என்ன செய்வது மறுவாழ்வு பெற்ற பிச்சைகாரர்களே திமுகவை மறந்து போயினர்? கவர்ச்சிக்கு பின்னால் போயினர்! உருப்படுமா நாடு?