ஞாயிறு, 19 ஜூலை, 2015

1200 அரசுப் பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு: ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு

தமிழகம் முழுவதும் 1,200 அரசுப் பள்ளிகளை மூடு வது என தமிழக அரசு முடிவு செய்திருப்பதற்கு ஆரம்பப் பள்ளி ஆசிரி யர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலக்குழுக் கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் மோசஸ் செய்தி யாளர்களிடம் கூறியதா வது: இடைநிலை ஆசிரியர் கள் பணியிட மாறுதல் களுக்கான கலந்தாய்வை தமிழக அரசு ஓராண்டு என்பதற்குப் பதிலாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை என்று அறிவித்துள்ளது. இதனை கைவிட்டு ஒவ் வொரு ஆண்டும் கலந் தாய்வுக் கூட்டங்களை நடத்த அரசு முன்வர வேண்டும் என்று ஜேக்டோ மற்றும் தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் கேட்டுக் கொள் கிறோம். இது ஒளிவுமறை வற்ற கலந்தாய்வாக அமைய வேண்டும்.

ஆங்கில வழிக்கல்வி முறை துவக்கப்பள்ளி களை அரசு அறிமுகப் படுத்தியுள்ளது. அதற் கான ஆசிரியர்களை நிய மிக்கவில்லை. அரசு தமிழ் வழிக்கல்வியை ஊக்கப் படுத்தவேண்டும். குறைந்த மாணவர்கள் எண் ணிக்கை உள்ள பள்ளி களை மூட அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அரசுப் பள்ளிகளை மூடக்கூடாது. கூடுதலான மாணவர் வருகையை உறுதிப்படுத்திட அரசு தேவையான நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மாநிலம் முழுவதும் 1200 அரசுப் பள்ளிகளை மூட அரசு முடிவெடுத் துள்ளது. அரசு பள்ளிகள் இயங்காமல் இருக்க தனி யார் பள்ளிகளுக்கும், சுய நிதி பள்ளிகளுக்கும் அரசு ஊக்கமளித்து வருகிறது. 
அரசு பள்ளிகளை இழுத்து மூட இது ஒரு திட்ட மிட்ட சதியாக நாங்கள் பார்க்கிறோம். அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு, முன்னேற்றத்திற்கு எந்த வகையிலும் அரசு உதவ வில்லை. ஒரு கிலோ மீட்டர் இடைவெளியில் 5_க்கும் மேற்பட்ட சுயநிதி பள்ளிகளுக்கு அனுமதி வழங்குகிறது அரசு. அரசு பள்ளிகளில் ஒரு ஆசிரி யருக்கு 20 மாணவர்கள் என்ற விகிதத்திற்கு மாறாக ஒரு ஆசிரியருக்கு 40 மாணவர்கள் என்ற விகிதத்தை அமலாக்கு கிறது. இதனால் கல்வியின் தரம் குறைகிறது.
தேர்தல் வாக்குறுதியை அதிமுக அரசு காற்றில் பறக்கவிட்டுள்ளது. அதி முக தனது தேர்தல் அறிக் கையில் நாங்கள் ஆட் சிக்கு வந்தால் கோரிக் கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங் களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்துவோம், தீர்வு காணுவோம் என்று கூறியிருந்தது.
மேலும் சிபிஎஸ்இ பள்ளிகளின் அனுமதியை ரத்து செய்வோம் என்று கூறியது. ஆனால் அதிமுக வின் ஆட்சி நிறைவடை கிற தறுவாயில் உள்ளது. இதுவரை ஆசிரியர்களை அழைத்துப் பேசவில்லை.

இந்நிலையில், ஆகஸ்ட் ஒன்றாம் தேதி ஆசிரியர் கள் கூட்டமைப்பான ஜேக்டோவின் சார்பில் சென்னையில் 5 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் தொடர் முழக்க பட்டினிப் போராட்டம் நடைபெற உள்ளது. செப்டம்பர் 2-அன்று அகில இந்திய அளவில் நடைபெறும் வேலைநிறுத்தத்தில் எங் களது சங்கம் முழுமையாக பங்கேற்கும்.  இவ்வாறு அவர் கூறினார்.viduthalaidaily.blogspot.ca

கருத்துகள் இல்லை: