ஞாயிறு, 27 நவம்பர், 2011

போயஸ் கார்டன் ‘கலை’ தெரியாத ஆளா, தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி?


முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏற்கனவே தலைக்குமேல் சட்டப் பிரச்சினைகள் இருக்கும் நிலையில், தன்னைச் சுற்றி உள்ளவர்கள் செய்யும் சில காரியங்கள் குறித்து மிக ஜாக்கிரதையாக இருக்கிறார் அவர் என்கின்றன அ.தி.மு.க. வட்டாரங்கள். குறிப்பிட்ட சிலர் கார்டனில் எவ்வளவுதான் செல்வாக்காக நடமாடினாலும், சட்ட ரீதியாக பிரச்சினைகள் வரும்போது, அவர்களைக் காப்பாற்ற முதல்வர் தயாராக இல்லை என்கிறார்கள் அவர்கள்.
இந்த அணுகுமுறை கடந்த சில நாட்களாக கடுமையாக அமல் செய்யப்பட்டதில் மகா சிக்கலில் உள்ளார் ‘தோட்டக்கலை’ கிருஷ்ணமூர்த்தி என்று தெரியவருகிறது.

தோ.கி. தொடர்பான முக்கிய நில விவகாரம் ஒன்று, எந்த நேரத்திலும் கெட்ட பெயராக ஆட்சியின் தலையில் வந்து விழலாம் என்ற நிலை உள்ளது. சென்னை அண்ணா மேம்பாலத்துக்கு அருகில் உள்ள இந்த நிலத்தின் மதிப்பு மாத்திரம் 220 கோடி ருபா என்கிறார்கள். ஏற்கனவே சிலரது தயவால் கிருஷ்ணமூர்த்தியின் கைக்கு சென்ற இந்த இடம், கைக்கெட்டியது வாய்க்கு எட்டாதபடி சில சட்டச் சிக்கல்கள் சூழ்ந்து கொண்டுள்ளன.
இந்த நில விவகாரத்தில் நடைபெறும் ஒவ்வொரு மூவையும் மிகக் கவனமாக கவனித்துக் கொண்டிருக்கிறார் கலைஞர். மிக விரைவில் இந்த நில விவகாரத்தை வைத்து, அரசுக்கும், ஆட்சியாளர்களுக்கும் செக் வைக்க முடியும் என்பது அனுபவசாலியான அவரது கணிப்பு.
எமக்கு கிடைத்த தகவல்களின்படி, தமிழக உளவுத்துறையின் ஒரு சிறிய டீம் இந்த நில விவகாரத்தில் முதல்வருக்காக தகவல்களை திரட்டத் தொடங்கியுள்ளது. யாரைப் பற்றியும், எந்த ‘செல்வாக்கு’ பற்றியும் கவலைப் படாமல் நேர்மையான ரிப்போர்ட் தாருங்கள்” என்று முதல்வரே நேரடியாக அந்த டீமிடம் கூறியுள்ளதாக தெரிகிறது.
அவர்கள் சேகரிக்கும் தகவல்கள் முதல்வர் வரை நேரடியாகச் சென்றால், தோ.கி. கடும் சிக்கலில் மாட்டுவார் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். முதல்வரின் மூட் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து, ‘பதவி பறிப்போ’ அல்லது ‘கட்டம் கட்டலோ’ பரிசாகக் கிடைக்கும் என்று ஒரு தரப்பு கூறுகின்றது.
மற்றொரு தரப்போ கேலியாகச் சிரிக்கிறது, “தோட்டக்கலைக்கு தெரியாத கார்டன் கலையா? அதெல்லாம் அவர் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லி, கச்சிதமாக காரியம் செய்துவிடுவார்” என்று!

கருத்துகள் இல்லை: