வையம் ஆண்ட வண்டமிழ் மரபே
கையிருப்பைக் காட்ட எழுந்திரு!
குறிக்கும்உன் இளைஞர் கூட்டம் எங்கே?
மறிக்கொணாக் கடல்போல் மாப்பகை மேல்விடு! —பாரதிதாசன்
இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு புனித யாத்திரை சென்ற சிங்கள யாத்திரிகர்கள் சிலர் மீது தமிழ் உணர்வு வெறிகொண்ட புலிகளின் இயக்கத்துக்கு அதன் அஸ்தமனத்தின் பின்னரும் அதி தீவிரமாக ஆதரவு வழங்கும் சீமான் தலைமையிலான “நாம் தமிழர்” இயக்கத்தின் உறுப்பினர்கள் தாக்குதல்கள் மேற்கொண்டுள்ளனர். அவ்வாறு தாக்கிய இன வெறியர்கள் -காடையர்கள்- மூவரை இந்திய போலீசார் கைது செய்துள்ளனர் என்ற செய்தி இப்போது வெளிவந்துள்ளது.
நாம் தமிழர் இயக்கத்தை வழிநடத்தும் சீமான் போன்ற இன வெறியர்களின் இலங்கை சிங்கள, இந்திய சீக்கிய மக்களின் மீதான துவேஷ கருத்துப் பரப்புரைகள் செய்வதும், தமிழர் என்ற பெயரில் அதிலும் தாங்கள்தான் உண்மையான கலப்பற்ற தமிழர்கள் என்று பிரகடனப்படுத்தி ஒரு அரசியல் கட்சியாக செயற்பட முனையும் பயணத்தில் கூட புலிகளின் வழியில் தமது மானஷீக தலைவனின் பயங்கரவாத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். சென்னையிலுள்ள மகாபோதி விகாரையில் தங்கியிருந்த யாத்த்ரீகர்கள் வீதியில் அடையாளம் காணப்பட்டு மிலேச்சத்தனமாக தாக்கப்பட்டுள்ளனர். அதனால் தாங்கள் தான் தமிழர்கள் என்று சொல்பவர்கள் தங்களின் (அ)நாகரீகத்தை வெளிப்படுத்தி தங்களையும் தமிழரையும் புலி வழிநின்று அடையாளப்படுத்தியுள்ளார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக