இத்துடன் இறுதியாக இருக்கட்டும் இத்தவறு!
சவூதியில் மரணதண்டனைத் தீர்ப்பு விதிக்கப்பட்டுள்ள இலங்கை யுவதி ரிஸானாவுக்கு கருணை காட்டுமாறு உலகெங்கும் இருந்து தொடர்ச்சியாக வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. இப்பெண்ணை மரணத்திலிருந்து காப்பாற்றுவதற் கான பிரார்த்தனைகளும் ஆங்காங்கே நடைபெறுகின்றன. ரிஸானாவின் சொந்த ஊரான மூதூரிலும் இவ்விதமான பிரார்த்தனையொன்று நடைபெற்றுள்ளது.
ரிஸானாவின் விடயமானது சர்வதேச ரீதியில் மனித உரிமைகள் அமைப்புகளின் கவனத்தை இன்று பெரிதும் ஈர்த்துள்ளது. அப்பெண் மீது சுமத்தப்பட்டிருக்கும் கொலை குற்றச்சாட்டை மறுதலிக்கும் விதத்தில் சர்வதேச அளவில் ஒருபுறத்தே குரல் எழுப்பப்படுகிறது. நீதிமன்றத் தீர்ப்புக்கு அப்பால் மனிதாபி மான அடிப்படையில் இப்பெண்ணுக்கு கருணை அளிக்கு மாறு மற்றொரு புறத்தே உருக்கமான வேண்டுகோள்கள் விடுக்கப்படுகின்றன.
சவூதியைப் பொறுத்தவரை வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு நீதி மன்றத்தினால் மரணதண்டனைத் தீர்ப்பு வழங்கப்படுவது இது தான் முதன்முறையல்ல... வெளிநாட்டவர்கள் பலர் பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்ட சம்பவங்கள் சவூதியில் பல தடவைகள் நிகழ்ந்துள்ளன.
ஆனால் ரிஸானா மீதான நீதிமன்றத் தீர்ப்பைப் பொறுத்த வரை கண்டனங்களும் வேண்டுதல்களும் உலக அளவில் தீவிரமடைந்திருப்பதற்கான காரணம் என்னவென்பது இங்கு கரிசனைக்குரியதாகிறது. அதேசமயம் உலகளாவிய வேண்டு தல்களை சவூதி அரசாங்கம் உதாசீனப்படுத்தி விடுவது முறையானதுமல்ல... ரிஸானா மீதான அனுதாப அலையின் பின்னணியில் மறைந்திருக்கும் அடிப்படைக் காரணி குறித்து அந்நாட்டு அரசாங்கம் பரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது.
ரிஸானா மீதான கொலைக் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்வதற்கு சர்வதேச அளவில் கூடுதலான தரப்பினர் தயாராக இல்லை யென்பது வெளிப்படையான உண்மை. இதற்குக் காரணமும் இல்லாமலில்லை. சவூதியில் வாழும் பிறநாட்டவர்கள் இது போன்ற நெருக்கடிகளின் போது நீதி விசாரணையை எதிர்கொள்வதில் பல்வேறு பின்னடைவான அம்சங்களைக் கொண்டிருக்கின்றனர். சில வழக்குகளின் போது நிரபராதி ஒருவர் தனது நியாயத்தன்மையை நிரூபிப்பதற்கான ஆற் றாமையையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இத்தகைய ‘ஆதரவற்ற தன்மை’ நிரபராதியைக் கூட ஆபத்தில் தள்ளி விடக் கூடும். அதேசமயம் குற்றச் செயலின் தன்மைக்கு மீறிய தண்டனையைக் கூட அனுபவிக்கும் பரிதாபம் ஏற்படலாம்.
ரிஸானாவின் வழக்கு விடயத்திலும் இது போன்ற பின்னடை வுகள் எதிர்நோக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவருகின்றன. எனவேதான் சட்டவரையறைகளுக்கு அப்பால் சவூதி அர சாங்கம் இவ்விடயத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டு மென்ற கோரிக்கைகள் பல்வேறு தரப்புகளிலிருந்தும் விடுக் கப்படுகின்றன. இவ்வேண்டுகோள்கள் அலட்சியப்படுத்தக் கூடியவையும் அல்ல.
ரிஸானாவின் இன்றைய பரிதாப நிலைமைக்குப் பொறுப்பேற்க வேண்டியவர்களாக மேலும் சிலர் உள்ளதை இவ்விடயத்தில் சுட்டிக்காட்டாமலிருக்க முடியாது. அந்த யுவதி அவளது பதினேழு வயதில் பணிப்பெண் வேலைக்கு அனுப்பப் பட்டுள்ளார். அவரது பிறப்புச் சான்றிதழில் 04.02.1988ல் பிறந்தவரெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் அவரது கடவுச் சீட்டில் 04.02.1982 என்பதே பிறந்த திகதியெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விடயங்கள் நிரூ பிக்கப்படுமானால் குற்றமிழைத்தோராக பலர் உள்ளனர். பராய மடையாத பதினேழு வயதான இளம்பெண்ணை பணிப் பெண் வேலைக்கு அனுப்ப ஆயத்தமான நபர்கள் தொடக்கம் அப்பெண்ணை விமானத்தில் வழியனுப்பி வைத்த நபர்கள் வரை அநேகர் இவ்விடயத்தில் குற்ற வாளிகளாவர்.
இக்குற்றத்தில் தொடர்புடையோர் கண்டுபிடிக்கப்பட்டு உரிய சட்டநடவடிக்கை மேற்கொள்வது மிகவும் அவசியம். இது போன்ற குற்றங்கள் எதிர்காலத்தில் நிகழாமலிருப்பதை உறுதி செய்வதற்கு அந்நடவடிக்கை இன்றியமையாததாகும்.
அதேசமயம் குடும்ப வறுமையைக் காரணமாக வைத்து எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இளவயதுப் பெண்களை வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக அனுப்பி வைக்கும் விபரீத காரியத்திற்கு பெற்றோர் எவரும் முற்படலாகாது. ரிஸானாவின் பெற்றோரான நபீக் தம்பதியர் இன்று அனுபவிக்கும் துயரம் எமது நாட்டில் இறுதியானதாக இருக்கட்டும்.

-Thinakaran -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக