இப்படியும் நடக்கிறது இன்றைய சூழ் நிலையில்
யாழ் இந்து மகளிர் கல்லூரி: மாணவி கண்ணீருடன் கூறிய ஓர் உண்மைச் சம்பவம்
ஊழலா கொள்ளையா லஞ்சமா நன்கொடையா எனக்கு நாமமிடத் தெரியாத வசூல். எத்தனை இடரிலும் எத்தனை துயரிலும் பங்கேற்று வாழ்வு சலித்த எமக்கு இது அடுத்தது...
ஒரு காலத்தில் வசதி படைத்த குடும்பமாக கிளிநோச்சி மாவட்டத்தில் நெற் போகத்தில் வாரி இறைத்து தானம் செய்த பரம்பரை. பதவிக்கும் பணத்திற்கும் வெறிகொண்டு துரோகம் செய்த எம் தோழர்களால் சொத்திழங்து வீடிழந்து 6/7 இடம்பெயர்வுகளின் பின்னர் இன்று கிடைத்தது ஓர் சிறிய ஓய்வுடன் முகவரி இட்டுக் கொள்ள ஓர் பழைய வீடும் தான்.
வன்னியில் என் சக மாணவர்களுக்கு கிடைத்திருப்பது வெறும் மர நிழலும் அதில் விரிக்க கிடைத்த UNICEF BAGஇம் தான். மழை வெய்யில் எதுவானாலும் அவர்களுக்கு தஞ்சமும் அவை தான். அதைப் பார்த்து மனம் கேளாது என் அப்பா என் மகளாவது வசதியாக கல்வியைத் தொடரட்டும் என்று விரும்பி மற்றவர்களின் காலைப்பிடித்து அங்கு இங்கு என்று திரிந்து ஈற்றில் கிடைத்தது யாழ் இந்து மகளிர் கல்லூரி தான். சேர்க்கும் போதே எத்தனையோ கேள்விகள் அதிலும் எத்தனையோ துயரங்கள்! கிடைத்தது பாக்கியம் என்று கல்வியைத் தொடர்கிறேன்.
ஆனால் நேற்றோ பாடசாலையில் கூறிய அறிவித்தல் கேட்டு செய்வதறியாது திகைத்து நிக்கின்றேன். நீதி கேட்க யாழ்ப்பாணத்தில் இயங்கும் இணையதளத்திற்கு கூறியது தான் இது.
பாடசாலையில் பழைய மாணவர்களால் கட்டப்பட்டு வந்த சிற்றுண்டிச் சாலையை முழுமையாக கட்டி முடிக்க பணம் போதாதாம்! கல்விபயிலும் மாணவர்கள் டிக்கெட் எடுக்க வேண்டுமாம்!!!
10ரூ / 20ரூ என்றால் அப்பாவிடம் தயங்காமல் கேட்டுவிடுவேன். ஆனால் எங்கள் வீட்டில் 2 மாதம் இரவில் ஒளிரும் குப்பிவிளக்கை அணைக்கும் அளவிற்கு நிதியை கேட்கிறார்கள். கேட்பது 1000ரூபா ரிக்கெட். இதை நான் யாரிடம் கையேந்துவது?
போரின் வடுக்கள் நிரம்பிய கிளிநோச்சி மாவட்டத்திலே கற்பதற்கு கல்விக் கூடங்கள் இன்றி மர நிழலிலேயே எம் போன்றோர் கல்வியைத் தொடரும் நிலையில் இங்கோ கற்பதற்கு எத்தனையோ வகுப்பறைகளும், ஆய்வு, கணினிக் கூடங்களும் உள்ள நிலையில் வசதி படைத்த சிற்றுண்டிச் சாலைதான் இல்லையாம்! இக் கட்டுமானத்திற்கு நிதி போதாதென்று நிதி சேகரிக்க 1000ரூபா டிக்கெட்டும் கலை நிகழ்ச்சிகளும் (30.10.2010) ஏற்பாடாகியுள்ளது. எம் போன்ற ஏழைகள் காலையில் 2 துண்டு பாணும் பாடசாலை முடிந்ததும் வீட்டில் கிடைக்கும் சோறும் தான் எங்கள் வயிற்றை முழுமையாகவோ பாதியாகவோ நிரப்பி வருகின்றது. இடைவேளை நேரத்தில் சிற்றுண்டிச் சாலைக்கு செல்ல என் மனம், வயிறு அழைத்தாலும் தற்போதைய குடும்ப பிண்ணனி அதை அறவே மறுத்துவிடுகிறது.
ஊழலா கொள்ளையா லஞ்சமா நன்கொடையா எனக்கு நாமமிடத் தெரியாத வசூல். எத்தனை இடரிலும் எத்தனை துயரிலும் பங்கேற்று வாழ்வு சலித்த எமக்கு இது அடுத்தது...
ஒரு காலத்தில் வசதி படைத்த குடும்பமாக கிளிநோச்சி மாவட்டத்தில் நெற் போகத்தில் வாரி இறைத்து தானம் செய்த பரம்பரை. பதவிக்கும் பணத்திற்கும் வெறிகொண்டு துரோகம் செய்த எம் தோழர்களால் சொத்திழங்து வீடிழந்து 6/7 இடம்பெயர்வுகளின் பின்னர் இன்று கிடைத்தது ஓர் சிறிய ஓய்வுடன் முகவரி இட்டுக் கொள்ள ஓர் பழைய வீடும் தான்.
வன்னியில் என் சக மாணவர்களுக்கு கிடைத்திருப்பது வெறும் மர நிழலும் அதில் விரிக்க கிடைத்த UNICEF BAG இம் தான். மழை வெய்யில் எதுவானாலும் அவர்களுக்கு தஞ்சமும் அவை தான். அதைப் பார்த்து மனம் கேளாது என் அப்பா என் மகளாவது வசதியாக கல்வியைத் தொடரட்டும் என்று விரும்பி மற்றவர்களின் காலைப்பிடித்து அங்கு இங்கு என்று திரிந்து ஈற்றில் கிடைத்தது யாழ் இந்து மகளிர் கல்லூரி தான். சேர்க்கும் போதே எத்தனையோ கேள்விகள் அதிலும் எத்தனையோ துயரங்கள்! கிடைத்தது பாக்கியம் என்று கல்வியைத் தொடர்கிறேன்.
ஆனால் நேற்றோ பாடசாலையில் கூறிய அறிவித்தல் கேட்டு செய்வதறியாது திகைத்து நிக்கின்றேன். நீதி கேட்க newjaffna தான் அடைக்கலம்.
பாடசாலையில் பழைய மாணவர்களால் கட்டப்பட்டு வந்த சிற்றுண்டிச் சாலையை முழுமையாக கட்டி முடிக்;க பணம் போதாதாம்! கல்விபயிலும் மாணவர்கள் டிக்கெட் எடுக்க வேண்டுமாம்!!!
10ரூ / 20ரூ என்றால் அப்பாவிடம் தயங்காமல் கேட்டுவிடுவேன். ஆனால் எங்கள் வீட்டில் 2 மாதம் இரவில் ஒளிரும் குப்பிவிளக்கை அணைக்கும் அளவிற்கு நிதியை கேட்கிறார்கள். கேட்பது 1000ரூபா ரிக்கெட். இதை நான் யாரிடம் கையேந்துவது?
போரின் வடுக்கள் நிரம்பிய கிளிநோச்சி மாவட்டத்திலே கற்பதற்கு கல்விக் கூடங்கள் இன்றி மர நிழலிலேயே எம் போன்றோர் கல்வியைத் தொடரும் நிலையில் இங்கோ கற்பதற்கு எத்தனையோ வகுப்பறைகளும், ஆய்வு, கணினிக் கூடங்களும் உள்ள நிலையில் வசதி படைத்த சிற்றுண்டிச் சாலைதான் இல்லையாம்! இக் கட்டுமானத்திற்கு நிதி போதாதென்று நிதி சேகரிக்க 1000ரூபா டிக்கெட்டும் கலை நிகழ்ச்சிகளும் (30.10.2010) ஏற்பாடாகியுள்ளது. எம் போன்ற ஏழைகள் காலையில் 2 துண்டு பாணும் பாடசாலை முடிந்ததும் வீட்டில் கிடைக்கும் சோறும் தான் எங்கள் வயிற்றை முழுமையாகவோ/பாதியாகவோ நிரப்பி வருகின்றது. இடைவேளை நேரத்தில் சிற்றுண்டிச் சாலைக்கு செல்ல என் மனம், வயிறு அழைத்தாலும் தற்போதைய குடும்ப பிண்ணனி அதை அறவே மறுத்துவிடுகிறது
தமிழன் - Tamilarn
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக