என்று தணியும் இந்த கொலை வெறித் தாகம்....?
கனடாவில் இலங்கைத் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்கள் உள்ளடக்கலாக அண்மையில் உள்ளூர் ஆட்சி, கல்விச்சபை போன்றவற்றிற்கான தேர்தல்கள் நடைபெற்றன. புலிகளின் மே 18 'மௌனித்தல்' என்ற நடவடிக்கைக்கு பின்பு நடைபெற்ற தேர்தல் இது. புலிகள் இல்லாவிடத்து புலிகளின் ஏஜன்டுகள் தமக்குள்ளேயே சொத்தை கையடக்கி கொள்வதற்கான யுத்தத்தின் வெளிப்பாடுகள் நாள் ஒரு வண்ணம் பொழுதொரு வண்ணம் என புதுப் புது துரோகக் குழுக்களை சுட்டிக்காட்டி கூத்துக்கள் இத் தேர்தலிலும் அரங்கேறியது. இவை. இதன் கடைசி வடிவம் கீழே உள்ள துண்டுப்பிரசுரம்.
புலிகளின் ஏஜன்ட்டுகளினால் நடத்தப்படும் தொலைக்காட்சி, வானொலிகள் பிரிந்து நின்று கொண்டாடிய கொண்டாட்டம் ஒக்ரோபர் 30, 31 இல் ரொறன்ரோவில் மக்களுக்கு கொண்டாடிக் காட்டப்பட்டுள்ளது என்பது யாவரும் அறிந்ததே. ஐரோப்பிய நாடுகளில் பத்தமநாபா ஈபிஆர்எல்எவ், புளொட் போன்ற அமைப்புக்கள் தளத்தில் உள்ள மக்களுக்கான அரசியல் தீர்வைப் பெறும் முயற்சிகளின் ஒருபடிமுறையாக தமது சர்வதேச கிளைகளின் மகாநாடுகளை நடாத்தும் வேளையில் புலிகளுக்குள் துரோகக் குழு 'களையெடுப்பு' கள் கொண்டாட்டமாக கொண்டாடப்படுகின்றது. இவ் கொண்டாட்டத்தின் மத்தியிலும் வரதராஜப்பெருமாள் குடும்பத்தின் வயது போன தாய் தந்தையருக்கு அனாமதேயமாக பிரான்சில் இருந்து 'வரதனையும் அவர் மனைவியையும் பிரான்சில் போட்டுத் தள்ளிவிட்டோம்’ என்ற கொலை வெறியாட்ட தொலைபேசி மிரட்டல் வேறு. என்று தணியும் இந்த கொலை வெறித் தாகம்....?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக