திங்கள், 1 நவம்பர், 2010

இந்தப் படம் ஒரு ஒரிஜினல் ஸ்கிரிப்ட், மிகவும் சுவாரஸ்யமானது,ஹாலிவுட் இயக்குநர் ஆலிவர் ஸ்டோன்

 உள்ளூரில் ஆளாளுக்கு 'எந்திரன் என்னோட கதை' என்று கிளம்ப, மூன்று ஆஸ்கார் விருதுகளை வென்ற பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஆலிவர் ஸ்டோன், அந்தப் படத்தை மிகவும் பாராட்டியுள்ளார்.

"இந்தப் படம் ஒரு ஒரிஜினல் ஸ்கிரிப்ட், மிகவும் சுவாரஸ்யமானது, அனுபவித்து மகிழ்ந்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

உலக அளவில் பார்வையாளர்களைக் கவர்ந்த, ரூ 400 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்துள்ள எந்திரன் திரைப்படம், அடுத்து சர்வதேச திரைப்பட விழாக்களுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளது.

ஆண்டுதோறும் மும்பையில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழா, இந்த ஆண்டு எட்டு தினங்கள் நடந்தது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் 250 படங்கள் திரையிடப்பட்டன.

இந்த விழாவின் இறுதிநாளில் திரையிடப்பட்ட ஒரே Mainstream Cinema ரோபோ(எந்திரன்)தான். நிறைவு நாள் நிகழ்ச்சியில் உலகின் சிறந்த படைப்பாளிகள் பலர் பங்கேற்றனர். இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலிருந்து பல இயக்குநர்கள், நடிகர்கள் இதில் கலந்து கொண்டு ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவான எந்திரனின் இந்தி வடிவமான ரோபோவைப் பார்த்தனர். சப் டைட்டில்களுடன் இந்தப் படம் திரையிடப்பட்டது.

ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர், தயாரிப்பாளரான ஆலிவர் ஸ்டோனும் பங்கேற்றார். சிறந்த திரைக்கதை மற்றும் இயக்கதத்துக்காக மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்ற ஆலிவர் ஸ்டோன், ரோபோவை ரசித்துப் பார்த்தார்.

விழாவின் முடிவில் ஆலிவர் ஸ்டோனுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. அவர் பேசுகையில், "இந்தியப் படங்கள், அவற்றில் காண்பிக்கப்படும் கலாச்சாரம் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த விழாவில் நான் பார்த்த படங்களில் என்னைக் கவர்ந்தது, ரோபோ-தான். மிகவும் அருமையாக, சுவாரஸ்யமாக எடுத்திருந்தனர். முற்றிலும் புதிதாக, ஒரிஜினலாக இருந்தது. நான் மிகவும் அனுபவித்து ரசித்தேன்..", என்றார்.
பதிவு செய்தவர்: செத்தமாடு
பதிவு செய்தது: 31 Oct 2010 6:14 am
யப்பா தட்ஸ் தமிழு நைசா இந்திரனை 400 கோடி இக்கு கொண்டுபோய் விட்டீர்களே, தியர் ல கூட்டம் இல்லாமலே 400 கோடி ந கூட்டம் இருந்த இந்திரன் 5000 கோடி வசூல் பண்ணும்
பதில் | அவதூறு குறித்து தகவல் தர


பதிவு செய்தவர்: சிர்ர்
பதிவு செய்தது: 31 Oct 2010 2:56 am
கவர்ச்chi hoட் padaங்கள் மட்டும் கவர்ச்சி ஹாட் படங்கள் மட்டும் : hot.amazing only.com

கருத்துகள் இல்லை: