ஞாயிறு, 21 ஜனவரி, 2024

சேலத்தில் 5 லட்சம் பேர்! சேலத்தில் இன்று போக்குவரத்து மாற்றம்.. திமுக இளைஞரணி மாநாடு எதிரொலி

tamil.oneindia.com - Nantha Kumar R : சேலம்: சேலத்தை அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில், திமுக இளைஞரணி மாநில மாநாடு இன்று நடைபெற உள்ளது. இதனால் சேலம்-ஆத்தூர் ரோடு உள்பட சில இடங்களில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மாற்று பாதையில் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாடு இன்று நடைபெற உள்ளது. பெத்தநாயக்கன்பாளையத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அரங்கில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான நிகழ்ச்சிகள் நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
Salem-attur road today traffic change due to DMK youth wing conferenceஇதையடுத்து இன்று திமுக இளைஞரணியின் மாநாடு நடைபெற உள்ளது. காலை 9 மணிக்கு திமுக எம்பியும், கட்சியின் பொதுச்செயலாளருமான கனிமொழி எம்பி மாநாட்டு பந்தலில் கொடி ஏற்றுகிறார். அதன்பிறகு காலை 10 மணியளவில் முதல்வர் ஸ்டாலின் மாநாட்டை தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டுக்கு திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை வகிக்க உள்ளார்.

அதன்பிறகு மாலையில் முதல்வர் ஸ்டாலின் பேச உள்ளார். இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 5 லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் பெத்தநாயக்கபாளையத்தையொட்டி பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சேலம் மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

குலுங்கப்போகும் சேலம்.. பிரமாண்ட அரங்கில் இன்று திமுக இளைஞரணி மாநாடு.. குவியும் உடன்பிறப்புகள் குலுங்கப்போகும் சேலம்.. பிரமாண்ட அரங்கில் இன்று திமுக இளைஞரணி மாநாடு.. குவியும் உடன்பிறப்புகள்

திமுக இளைஞரணி மாநாட்டையொட்டி நாளை உளுந்தூர்பேட்டை வழியாக சேலம், கோவை, கேரளா செல்லும் வாகனங்கள் உளுந்தூர்பேட்டையில் இருந்து பெரம்பலூர், துறையூர், முசிறி, நாமக்கல் வழியாக சேலத்துக்கும், உளுந்தூர்பேட்டையில் இருந்து பெரம்பலூர், துறையூர், முசிறி, குளித்தலை, கரூர் வழியாக கோவை, கேரளா செல்ல வேண்டும்.

தருமபுரி மார்க்கத்திலிருந்து வரும் வாகனங்கள், சேலம் வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் தொப்பூர் பிரிவு, மேச்சேரி, ஓமலூர், தாரமங்கலம், கொங்கணாபுரம், சங்ககிரி, திருச்செங்கோடு, பரமத்தி, கரூர் வழியாக செல்லலாம். தென் மாவட்டங்களில் இருந்து நாமக்கல் வழியாக வரும் வாகனங்கள் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கர்நாடகா செல்லும் வாகனங்கள் நாமக்கல், திருச்செங்கோடு, சங்ககிரி, கொங்கணாபுரம், தாரமங்கலம், ஓமலூர், மேச்சேரி, தொப்பூர் வழியாக செல்லலாம்.

தருமபுரி மார்க்கத்திலிருந்து வரும் வாகனங்கள் ஈரோடு, கோவை, கேரளா செல்லும் வாகனங்கள் தொப்பூர் பிரிவு, மேச்சேரி, மேட்டூர், அம்மாப்பேட்டை பவானி, பெருந்துறை வழியாகவும் செல்லலாம். கோவை மார்க்கத்தில் இருந்து சேலம் வழியாக சென்னை அல்லது கர்நாடகா செல்லும் வாகனங்கள், ஈரோடு மாவட்டம் லட்சுமி நகர் (பவானி பைபாஸ்), பவானி, அம்மாப்பேட்டை, மேட்டூர், மேச்சேரி, தொப்பூர், தருமபுரி வழியாக செல்லலாம். வாணியம்பாடி, திருப்பத்தூர், ஊத்தங்கரை அரூர் வழியாக சேலம் வரும் வாகனங்கள் வாணியம்பாடியில் இருந்து நாட்றாம்பள்ளி, பர்கூர், கிருஷ்ணகிரி, தருமபுரி வழியாக செல்லலாம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: