புதன், 10 ஜூலை, 2024

உத்தர பிரதேசத்தை சூறையாடும் குஜராத்தி மாபியாக்கள் ..உபி முதல்வரின் கையறு நிலை

May be an image of 3 people and temple

தமிழ்க்கவி  :  உபியில் தற்போதைய நிலை பற்றி சமாஜ்வாடி தலைவர் ஐபி. சிங் வெளியிட்ட பதிவு :
"நாடாளுமன்றத் தேர்தலில் பைசாபாத் தொகுதியில் பிஜேபி தோற்றத்திலிருந்து அயோத்திக்கு முதல்வர் யோகி செல்வதில்லை
 அயோத்தி 4 அடி தண்ணீர் நிரம்பியது, அவசர மருத்துவமனை நீரில் மூழ்கியது, விமான நிலையம் மூழ்கியது, சாலைகள் அழிந்தது, வளர்ச்சி முழுவதும் தண்ணீரில் மூழ்கியது.
 90% வேலை குஜராத் நிறுவனங்களிடமே இருந்தது.
 50% கமிஷன் பந்தயம் வெளிப்படையாக நடத்தப்பட்டது, அது இன்றும் தொடர்கிறது.
 அவர்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படவில்லை அல்லது 30 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சியை சிஏஜி தணிக்கை செய்யவில்லை.
 உ.பி.யில் இதுபோன்ற வெளிப்படையான ஊழல் நடந்ததில்லை.
 உ.பி.யை வெளியாட்கள் சூறையாடுகின்றனர்.
 உ.பி.யில் கொள்ளையர்கள் கொள்ளையடித்துக்கொண்டிருக்க, முதல்வர் இந்த கொள்ளையை நிராதரவாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார் "


அடுத்த பிரதமர் வேட்பாளர் என சங்கிகளாலையே தூக்கி நிறுத்தப்பட்ட யோகி ஆதித்யநாத்தின் நிலையே இது என்றால்...
மற்ற மாநில பிஜேபி முதல்வர்களின் கதி?
அனைவரும் குஜராத் கம்பெனிகளுக்கு காண்ட்ராக்ட் பிடித்துக் கொடுக்கும் ஏஜெண்டுகளாக மாற்றப்பட்டிருக்கிறார்கள்
குஜராத் முதலாளிகள் அந்தந்த மாநிலத்தை சூரையாட பழி மண்ணின் மைந்தர்கள் மேல் விழுகிறது
இதனை சரிகட்ட , தங்கள் ஓட்டு வங்கியான இந்துக்களிடையே செல்வாக்கை தக்க வைக்க
அவர்கள் மோடியை விட தீவிரமாக முஸ்லிம்களை மலினப்படுத்துவதும் எதிர்க்கட்சிகளை அடக்குவதும் தொடர்கிறது
 முதல் முறையாக பிஜேபி பதவி ஏற்றதும் ஸ்டெர்லைட் வேதா அகர்வால் நேற்று தலைமைச் செயலகத்தில் ஒரிசா முதல்வரை சந்தித்தபோது அங்கிருந்த அதிகாரிகள் அமைச்சர்களின் உடல் மொழியே காட்டி கொடுத்து விட்டது பிஜேபியின் மேலிடம் குஜராத்தி கம்பெனி முதலாளிகள் தான் என்று

கருத்துகள் இல்லை: