ஞாயிறு, 7 ஜூலை, 2024

பக்தி இயக்கத்திடம் தமிழ் மொழியை பறிகொடுத்த தமிழர்கள்

 ராதா மனோகர் : பக்தி இயக்கம் என்று அழைக்கப்படும் வழிபாட்டு இயக்கம் தமிழ் மொழியை கைப்பற்றியது!
தமிழ் மொழியில் சைவ வைணவ மசாலா கதைகளை பாடல்களை திணித்தனர்
இன்றுள்ள நிலைமை என்னவென்றால் தமிழ் மொழில் இருந்து  பக்தி இலக்கியத்தை நீக்கி விட்டால் தமிழில் ஒன்றுமே இருக்காதுஎன்று நாக்கூசாமல் சிலர் கூறுகிறார்கள்
ஆரியர்கள் முதலில் கைப்பற்றியது தமிழ் மொழியைதான்
அதன் பின்பு அரசர்களை மந்திரம் மாயம் பெண்ணாசை எல்லாம் காட்டி மயக்கி நிலத்தையும் பொருளையும் கொள்ளை கொண்டனர்
தமிழ் மொழியை பக்தி இயக்கத்தின் திரிபு கதைகளிலும் புராணங்களில் இருந்தும் மீட்கவேண்டிய அவசியம் தற்போது உள்ளது
இல்லையேல் சங்கிகள் சர்வ சாதாரணமாக பக்தி என்ற போர்வையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி விடுவார்கள்.

ஐம் பெருங்காப்பியங்களில் சிலப்பதிகாரம்,
சீவக சிந்தாமணி,
வளையாபதி
இவை மூன்றும் சமண சமய சார்புடையவை.
மணிமேகலையும்,குண்டல கேசியும் பௌத்த சமய நூல்கள்.
ஐஞ்சிறுங் காப்பியங்களும் சமண சமய காப்பியங்கள்.
 எட்டுத் தொகை நூல்களான
நற்றினை,
குறுந்தொகை,
ஐங்குறு நூறு,
பதிற்றுப் பத்து,
பரிபாடல், கலித்தொகை, அகநானூறு,புற நானூறு ஆகிய எட்டும் சமண நூல்கள்.


பத்துப்பாட்டுகளில் திருமுருகாற்றுப் படை தவிர மீதி ஒன்பது பாடல்களும் பௌத்த, சமண சமய நூல்கள் ஆகும்.
பதிணென் கீழ்கணக்கு நூல்களில் திருக்குறள், நாலடியார், நாண்மணிக்கடிகை என்று 11 நூல்கள்
அனைத்தும் சமணம் பௌத்த சமய சார்ப்புடையவைகள்.
 அதேபோல் பதிணென் மேற்கணக்கு நூல்கள் அனைத்தும் சமணம்.
 இலக்கியங்களை தொகுக்க, நீக்க, பகுப்பாய்வு செய்ய பவணந்தி முனிவர் எழுதிய நன்னூல் சமண சமய நூல்.
நீதிநூல்களில் பெரும்பகுதி ஏலாதி, சிறுபஞ்சமூலம்,நாலடியார்,பழமொழி நானூறு ஆகியவை சமண நூல்களாகும்.சமணர் தமிழுக்கு செய்துள்ள தொண்டுபோல வேறு சமயத்தவர் தமிழ் மொழிக்கு செய்யவில்லை
வைதீக மதத்திற்கு வாலாக இருக்கும் தமிழர்களே
இந்த இலக்கிய படைப்புகள் இல்லையென்றால் தமிழுக்கு ஏது மதிப்பு?
தமிழுக்கு பார்ப்பன பீடைகள் எழுதிய நூல்கள் எதுவும் உண்டா..

கருத்துகள் இல்லை: