புதன், 5 ஜூன், 2024

கமல்ஹாசன் : திமுக அரசின் பணிகளின் அறுவடைதான் இந்த வெற்றி” - முதலமைச்சருக்கு பாராட்டு !

“திமுக அரசின் பணிகளின் அறுவடைதான் இந்த வெற்றி” - முதலமைச்சருக்கு கமல்ஹாசன் பாராட்டு !

 கலைஞர் செய்திகள்  -KL Reshma  :  நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற 18 ஆவது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 ஆண்டுகால பாசிச பா.ஜ.க ஆட்சியை வீழ்த்துதுவதற்காக எதிர்க்கட்சிகள் இணைந்து ’இந்தியா’ என்ற கூட்டணியை உருவாக்கி தேர்தலில் களம் கண்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதியோடு நிறைவடைந்த தேர்தலின் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. 543 தொகுதிகளில் ஏற்கனவே குஜராத்தின் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், மீதமிருக்கும் 542 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.


“திமுக அரசின் பணிகளின் அறுவடைதான் இந்த வெற்றி” - முதலமைச்சருக்கு கமல்ஹாசன் பாராட்டு !

இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு & புதுச்சேரி என மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர். இதில் தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி, தர்மபுரி ஆ.மணி, CPI (M) வேட்பாளர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்து அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்படவுள்ளனர்.

தமிழ்நாடு, புதுச்சேரி என 40 தொகுதிகளும் பாஜக தலைமையில் கூட்டணி கட்சிகளும் போட்டியிட்டது. தற்போது பாஜக மட்டுமல்ல அதன் கூட்டணி கட்சிகளும் தோல்வியை தழுவியுள்ளது. மேலும் அதிமுக இந்த முறை 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டு படுதோல்வியடைந்துள்ளது. தொடர்ந்து நாம் தமிழர் ஒரு இடத்தில் கூட முன்னிலையில் இல்லை.

திமுக அரசு தமிழ்நாட்டுக்கு செய்து வரும் நல்லவைகளை மக்கள் மத்தியில் பிரசாரம் செய்து தற்போது தமிழ்நாட்டில் மீண்டும் 40-க்கு 40 என்று சாதனை படைத்துள்ளது. இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“திமுக அரசின் பணிகளின் அறுவடைதான் இந்த வெற்றி” - முதலமைச்சருக்கு கமல்ஹாசன் பாராட்டு !

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

திமுக அரசு செய்துகாட்டிய பணிகளால் கிடைத்த வெற்றியை அதன் தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டில் அறுவடை செய்திருக்கிறது. மக்களுக்காகச் சிந்தித்து, மக்கள் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து நடத்தப்பெறும் நல்லாட்சிக்கு ஆதரவளிக்க மக்களும் தயாராக இருப்பதையே இந்த மாபெரும் வெற்றி காட்டுகிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 2019 மக்களவைத் தேர்தலில் தொடங்கி, தான் எதிர்கொண்ட அனைத்துத் தேர்தல்களிலுமே அருமை நண்பர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெற்றியைக் குவித்திருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

இந்தியாவைக் காக்கும் போரில், திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து களம் கண்ட கூட்டணிக் கட்சியினருக்கும், மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களுக்கும், எங்கள் கூட்டணிக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். சிந்தாமல் சிதறாமல் சந்தேகம் இல்லாமல் நாம் பெற்றிருக்கும் இந்த வெற்றி இந்தியாவிற்கு வழியும், ஒளியும் காட்டக் கூடியவை. இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க!

கருத்துகள் இல்லை: