ஞாயிறு, 2 ஜூன், 2024

ராகுல் காந்தி : இந்தியா கூட்டணி 295 தொகுதிகளில் வெற்றி பெறும்! மோடியின் நாடக கருத்துக் கணிப்புக்களை நம்பவேண்டாம் "It is not exit poll, it is Modi fantasy poll."

 மாலை மலர் :   புதுடெல்லி பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இறுதி கட்ட ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது.
நேற்று மாலை வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் பா.ஜ.க.வே 3-வது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்தன.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் காங்கிரஸ் தலைவர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்கள்.
வாக்கு எண்ணிக்கையின் போது எப்படி நடந்து கொள்வது என்பது தொடர்பாக இந்த ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்துக்கு வர முடியாத சில தலைவர்கள் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பங்கேற்றனர்.

இதே போன்று காங்கிரஸ் வேட்பாளர்களிடமும் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. வாக்கு எண்ணிக்கையின் போது செயல்படும் விதம் குறித்து வியூகம் அமைப்பது பற்றி விவாதிக்கப்பட்டது.
ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, 'இது கருத்துக் கணிப்பு அல்ல, மோடியின் ஊடகக் கருத்துக் கணிப்பு' என்றார். மேலும் இந்தியா கூட்டணிக்கு எத்தனை இடங்கள் என்று கேட்டால், "சித்து மூஸ் வாலா 295 பாடலைக் கேட்டீர்களா? 295" என கூறினார்.
WATCH | Congress leader Rahul Gandhi says, "It is not exit poll, it is Modi media poll. It is his fantasy poll."
    When asked about the number of seats for INDIA alliance, he says, "Have you heard Sidhu Moose Wala's song 295? 295."

கருத்துகள் இல்லை: