ஞாயிறு, 2 ஜூன், 2024

இந்தியா கூட்டணி தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை! தபால் வாக்குக்களை முதலில் எண்ணி அறிவிக்க வேண்டும்

 tamil.oneindia.com - Mani Singh S :  டெல்லி: இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை அளித்துள்ளனர். 3 விஷயங்களை வலியுறுத்தி தேர்தல ஆணையத்திடம் காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி, திமுக எம்பி டிஆர் பாலு உள்ளிட்டோர் மனு ஒன்றை அளித்தனர்.
நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்றது.
லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், ஜூன் 04 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கைக்கான முழு ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.



தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இன்று இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்தனர். காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி, திமுக எம்பி டிஆர் பாலு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்திடம் மனு ஒன்றை அளித்தனர்.

தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்த பிறகு இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர் கூறியதாவது: - மூன்று முக்கிய பிரச்னைகள் குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளோம். வாக்குக் எண்ணிக்கையை நேர்மையாக நடத்த வேண்டும். முறைகேடு நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

தபால் வாக்குகளை முதலில் எண்ணி முடிவுகளை அறிவிக்க வேண்டும். அதன்பிறகே வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ண வேண்டும் என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தியிருக்கிறோம். தபால் வாக்கு முடிவை தெரிவிக்காமல் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகளை அறிவிப்பது சட்டத்துக்கு எதிரானது.

தபால் வாக்குகளை எண்ணும் முன்பாக இவிஎம் இயந்திரங்களை எடுத்துவிடலாம் என்ற திடீரென ஒரு அறிவுறுத்தல் வந்தது. உடனடியாக திமுக சார்பில் மனுவும் அளிக்கப்பட்டது. இவிஎம் வாக்குகளை எண்ணும் முன்பாக தபால் வாக்கு எண்ணிக்கையை எண்ண வேண்டும் என இன்று தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளோம்" என்றார்.

English summary
The BJP has requested the Election Commission to take appropriate action as the Congress and India's alliance parties are trying to trivialize the election process and this is a direct attack on democratic institutions.

கருத்துகள் இல்லை: