ஞாயிறு, 2 ஜூன், 2024

கலைஞரை சந்தித்த ரணில் விக்கிரமசிங்கா - ஈழப்பிரச்சனைக்கு கலைஞர் மாதிரி யாரும் ஆலோசனை தரவில்லை என்று கூறினார்!

 ராதா மனோகர் : ஒரு முறை (கலைஞர்) முதலமைச்சர் அலுவலகத்தில இலங்கை எதிர்க்கட்சி தலைவராக இருந்த,
இப்போது அதிபராக இருக்க கூடிய திரு ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வந்து சந்தித்தார்.
அப்போது கலைஞரும் ரணில் விக்கிரமசிங்க இரண்டுபேர்  மூன்றாவதாக என்னை மட்டும் நிற்க சொன்னார் .
முக்கியமான விஷயங்களை ஆங்கிலத்தில் சொல்வதற்காக என்னை வைத்து கொண்டார்
அப்போது இலங்கையில் நடந்த குழப்பங்கள் ஈழத்தமிழர்கள் விடுதலை புலிகள் இந்த பிரச்சனை பற்றி எல்லாம் இரண்டுபேரும் விவாதித்து கொண்டிருந்தார்கள்
அப்போது கலைஞர் வந்து ஒரு சஜஷன் . முக்கியமான ஒரு சஜஷசனை (ஆலோசனை) சொல்றேன்ன்னுட்டு சொன்னார்.
அப்ப அவர் சொன்னார் நீங்க வந்து ஆடோனாமி என்று சொல்றீங்க .. அவங்க வந்து செப்பரேஷன் தனி ஈழம்னு கேக்கிறாங்க
நீங்க மானில சுயாட்சி .. மாநிலத்திற்கு அதிக அதிகாரம்  ... இப்படியெல்லாம் போட்டு கன்பியூஸ் பண்ணிட்டு இருக்கிறீங்க
அவங்க இந்த வம்பே வேண்டாம் . நாங்க தனி நாடாவே இருந்துகிறோம் ..


வடகிழக்கு மாகாணம் தனி ஈழம்னு டிகிளையார் ஆகட்டும் அப்படீன்னு சொல்றாங்க
நான் என்ன சஜஸ் (ஆலோசனை) பண்ணுறேன்னாக்க
இட் ஷுட் பி மோர் தான் ஆட்டனமி  .. அன்ட் லெஸ் தான் செபேரேஷன் .. ஒரு வயா மீடியா
இரண்டுக்கும் இடையிலே
ஆங்கிலத்திலேயே சொன்னாரா?
ஆங்கிலத்திலே சொன்னார்
அப்புறம் என்னைய  அவருக்கு புரியும் படியா சொல்லுன்னாரு . நான் எக்சிபிளெயின் பண்ணினேன்
இது மாதிரி ஒரு சஜஷன் யாரும் . நானும் எத்தனையோ தலைவர்களை சந்திச்சிருக்கேன் .
இலங்கையில உள்ள இனப்பிரச்சனைக்கு  இது மாதிரி ஒரு வயா மீடியா தீர்வு யாரும் சொல்லல  
நீங்க சொல்றீங்க .. இது அவசியம் பரிசீலிக்க படவேண்டிய ஒன்று .
இதை நாங்க பரிசீலிப்போம்
நான் இதை எல்லார்கிட்டையும் சொல்றேன்  என்று சொல்லிட்டு போனார் !

கருத்துகள் இல்லை: