ஞாயிறு, 2 ஜூன், 2024

கலைஞர் 101- வெறும் பெயர் அல்ல வெறும் சொல் அல்ல வெறும் பட்டம் கூட அல்ல! அது ஒரு கொள்கை வரலாறு

 ராதா மனோகர் : கலைஞர் என்ற வரலாறு ஒரு நூறாண்டை கடந்திருக்கிறது!

ஒரு சாதாரண மனிதராக வாழ்ந்து  
சாதாரண மக்களின் வாழ்வு உயர கலைஞர் அளவு பணியாற்றியவர்கள் வெகு குறைவு
பல விடயங்களில் கலைஞர் மட்டுமே இந்த வரலாறை கொண்டிருக்கிறார்.
பெரும் ஆயுத புரட்சிகளால் மட்டுமே சாத்திய படக்கூடிய பல விடயங்களை கலைஞர் அரசியல் அதிகாரத்தின் மூலமும் மக்களிடேயே மேற்கொண்ட பரப்புரைகள் மூலமும் செய்திருக்கிறார்!
சாதாரண மக்களின் வாழ்வு மேம்படுவது என்பது பல வேளைகளில் பலருக்கும்  ஏற்புடையதாக இருப்பதில்லை!  
குறிப்பாக ஆரிய ஆதிக்க சக்திகளின் பிடியில் சிக்கி இருந்த மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை உண்டாக்குவது என்பது ஆயுத போராட்டங்களை விட நுட்பமானது ஆபத்தானது!
கலைஞர் மீது இன்று வரை அந்த சக்திகளின் வன்மமும்  வசையும் கொஞ்சம் கூட குறைந்த பாடில்லை!
ஆதிக்கம் பறிபோன ஆற்றாமை ..
சாதாரண மக்களும்  சரிசமமாக வாழ்வில் உயர்வதை  ஆண்ட பரம்பரையில் எப்படி சகித்து கொள்ளும்?
இன்றும் கூட அந்த ஆரிய பார்ப்பன சக்திகளிடம் இருந்து மக்கள் முழுமையாக விடுதலை பெற்றுவிடவில்லை!
திராவிட துணைக்கண்டம் முழுவதும் மக்களுக்கு  சுயமரியாதை உணர்வும் சுயசிந்தனையும் வரப்பெற்று சமூக நீதி பூரணமாக கிடைக்கும் வரை கலைஞர் பெயரை உச்சரித்தே தீரவேண்டும்!

கலைஞர் என்பது வெறும் பெயர் அல்ல வெறும் சொல் அல்ல வெறும் பட்டம் கூட அல்ல!
அது ஒரு கொள்கை வரலாறு
தோல்வியின் எல்லையில் துவண்டு போயிருப்போருக்கு அது தட்டி எழுப்பும் வீரப்பேரிகை!
தட்டி கேட்க ஆளின்றி நொந்து போயிருப்போருக்கு அது உயிர் கொடுக்கும் உன்னத மருந்து
எந்த கொம்பனும் தட்டி பறித்து விட முடியாத தன்னிகரற்ற மேடை அது!
முட்டி மோதி தகர்த்து விடலாம் என்று மனப்பால் குடிப்போரின் பகல் கனவில் கேட்கும் இடிமுழக்கம் அது
இன்னும் தூக்கம் கலையாமல்
சிந்தனையை பறிகொடுத்து
வாழ்வின் சுகம் தொலைத்து  
தூங்குவோர்களின் காதில் அருகே சென்று பாடவேண்டிய
திராவிட திருப்பள்ளி எழுச்சி பாடல்தான்
கலைஞர் கலைஞர் கலைஞர்!  
 

கருத்துகள் இல்லை: