செவ்வாய், 4 ஜூன், 2024

“கருத்துக் கணிப்புகளை மக்கள் பொய்யாக்கி விட்டனர்” - கலாநிதி வீரசாமி கருத்து |

 Hindu Tamil  : “கருத்துக் கணிப்புகளை மக்கள் பொய்யாக்கி விட்டனர்” - கலாநிதி வீரசாமி கருத்து
சென்னையில் வாக்கு எண்ணும் மையத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த கலாநிதி வீராசாமி
சென்னை: “மக்களவைத் தேர்தல் கருத்துக்கணிப்புகளை எல்லாம் மக்கள் பொய்யாகிவிட்டனர்” என்று வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி தெரிவித்துள்ளார்.
வடசென்னை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி ஐந்தாவது சுற்று முடிவில் 1,43,705 வாக்குகள் பெற்று, 98,617 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இந்நிலையில் வாக்கு என்னும் மையத்துக்கு வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இண்டியா கூட்டணி தமிழகத்தில் 6, 7 இடங்களில் மட்டுமே வெல்லும் என பொய்யான கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டது. இது மோடியின் கருத்துக்கள்; உண்மையான கருத்து கணிப்பு இல்லை.



பாஜக கூட்டணி 370 இடங்களில் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்து இருந்தன. ஆனால், பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்குமா? என்பதே தற்போது சந்தேகமாக இருக்கிறது.ஆக, கருத்துக்கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கி மாபெரும் வெற்றியை மக்கள் கொடுத்துள்ளனர்.

இந்த தேர்தல் முடிவு திமுக அரசு சிறப்பான மக்கள் சேவை செய்துள்ளதை காட்டுகிறது. இந்திய அளவில் 370 இடங்கள் என்று சொல்லி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த இண்டியா கூட்டணி மாபெரும் வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது” என்றார்.

கருத்துகள் இல்லை: