வெள்ளி, 2 செப்டம்பர், 2022

மயிலாப்பூர் K.P. ஹரன் அய்யரும் இலங்கை தமிழரின் அரசியலும்... சொல்லாத செய்தி

ராதா மனோகர் :  கே பி ஹரன்  1959 இல் இருந்து 1979 வரை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர்
இவரின் முழுப்பெயர்  கிருஷ்ணசுவாமி பிராணதார்த்தி ஹரன் என்பதாகும்
தஞ்சை மாவட்டம் திருவையாறை சேர்ந்தவர்
சென்னையில் சுமார் 10 ஆண்டுகள்  "தமிழ்நாடு", "ஸ்வராஜ்யா", "தாருல் இஸ்லாம்", "ஹனுமான்", "ஹிந்துஸ்தான்" ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றிய பின்பு  இலங்கையில் வீரகேசரியில் (1939-1959) 20 ஆண்டுகள் முதன்மை ஆசிரியர்.
யாழ்ப்பாணம் ஈழநாட்டில் (1959-1979) 20 ஆண்டுகள் முதன்மை ஆசிரியராகவும் பணியாற்றியவர் .
ஐய்யறன்  கேபிஎச் போன்ற பல புனைபெயர்களிலும் எழுதியவர்
இலங்கையில் பிரபல  ஆன்மீகச் சொற்பொழிவாளராகவும் அறியப்பட்டவர்  1979 இல் சென்னை மயிலாப்பூரில்  1981 இல் தனது 75 ஆவது வயதில் காலமானார்.
இலங்கை தமிழர்களின் அரசியலில் 1959 இல் இருந்து 1979 வரை இவர் செலுத்திய ஆதிக்கத்தை பற்றி இன்றுவரை ஒருவரும் பேசியதில்லை   
இலங்கை தமிழருக்கு இவரால் விளைந்த கேடுகள் கொஞ்ச நஞ்சமல்ல
சமூக சித்தாந்த ரீதியில் இவர் அச்சு அசல் மயிலாப்பூர் அவாள்தான்  

வாசகர்களை  தப்பி தவறியும் சரியான வழியில் சிந்தித்து விட கூடாதே  என்பதில் இவர் மிக சிரத்தையோடு செயல்பட்டார்
இதில் மிக பிரமாண்டமான வெற்றியை இந்த அய்யர் பெற்றார்  
குறிப்பாக இலங்கை தமிழர்களை சதா சிங்கள மக்களுக்கு எதிராக கொம்பு சீவி விட்டதில் இவரின் பங்கு அளப்பரியது .
அன்றைய தமிழரசு கட்சியின் வெற்று / போலி  தமிழ் தேசியத்தை  உரம் போட்டு வளர்த்தார்
மறுபுறத்தில் வடஇந்தியா பற்றிய செய்திகளை இப்போது தினமலர் தினமணி போன்று அன்றே இலங்கை தமிழர்களுக்கு அறிமுக படுத்தினார்.
வாசகர்க்கை அசல்  டெல்லி பக்தர்களாக மாற்றி விட்டிருந்தார்
இவரின் அசல் ஆரிய பார்ப்பனீய பிரசார நசிவு  எழுத்துக்களை பற்றி ஒரு பெரிய புத்தகமே எழுதலாம்  .
யாழ்ப்பாண நாடாளு மன்ற உறுப்பினர் திரு அல்பிரட் துரையப்பாவை ஒரு துரோகியாக கட்டமைத்ததில் இந்த மயிரலாப்பூர் பார்ப்பனரின் பங்கு அளவு கணக்கில்லாதது

கருத்துகள் இல்லை: