சனி, 3 செப்டம்பர், 2022

முதல்வர் ஸ்டாலின் முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து திராவிட மாடல் பற்றி முக்கிய ஆலோசனை

tamil.oneindia.com  :  Vigneshkumar :  "திராவிட மாடல்.." கேரளாவில் பினராயி விஜயனை சந்தித்தார் ஸ்டாலின்.. மீட்டிங்கில் ஆலோசிக்கப்பட்டது என்ன
சென்னை: கேரள சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்துப் பேசினார்.
இந்தியாவின் தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, புதுச்சேரியில் பல பிரச்சினைகள் நிலவுகிறது.
மாநிலங்களுக்கு இடையே நிலவும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கத் தென் மண்டல கவுன்சில் கூட்டத்தை மத்திய அரசு கேரளாவில் ஏற்பாடு செய்துள்ளது.
"திராவிடம்.!" ட்விட்டரில் ஒற்றை வார்த்தை டிரெண்டிங்கில் இணைந்த முதல்வர் ஸ்டாலின்.. பளீச் ட்வீட்
கேரளா பயணம்
மத்திய உள் துறை அமைச்சகம் நடத்தும் இந்த தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் அனைத்து தென் மாநிலங்களில் முதல்வர்களும் கலந்து கொள்கின்றனர். இதில் மாநிலங்களுக்கு இடையே நிலவும் பிரச்சினைகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களும் ஆலோசிக்க உள்ளனர். இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள முதல்வர் ஸ்டாலின் கேரளா சென்றுள்ளார். அவரை கேரள முதல்வர் பினராயி விஜயன் வரவேற்றார்.

பினராயி விஜயன் உடன் சந்திப்பு
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை கோவளத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனை வரவேற்றார். இது தொடர்பாக பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில், "தெற்கு மண்டல கவுன்சில் கூட்டத்திற்கு முன்னதாக. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் கேரளா மற்றும் தமிழகம் இடையேயான வலுவான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டது" எனப் பதிவிட்டுள்ளார்.

திராவிட மாடல்
பினராயி விஜயனுக்கு பொன்னாடை அணிவித்து ஸ்டாலின், அவருக்குத் திராவிட மாடல் ( The Dravidian Model) என்ற புத்தகத்தையும் பரிசாக வழங்கினார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டரில், "கேரளாவில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர், என் அன்புத் தோழர் பினராயி விஜயனை சந்தித்தேன். தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களுக்கும் பயன்தரும் திட்டங்களின் தொகுப்பை அவரிடம் வழங்கினேன். நமது வரலாற்று உறவுகளை வலுப்படுத்திக் கொண்டு நாம் ஒன்றிணைவோம்!" என்று பதிவிட்டுள்ளார்.

ஆலோசனைக் கூட்டம்
கேரள அரசின் சார்பில் நடைபெற்ற கலை, இசை நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இன்று திருவனந்தபுரத்தில் தங்கும் ஸ்டாலின், நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்கிறார். அந்தக் கூட்டம் முடிந்த உடன் நாளை இரவு 7 மணிக்கு விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்

கருத்துகள் இல்லை: