ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2022

காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான உட்கட்சி தேர்தல் அக்டோபர் 17 ஆம் தேதி நடைபெறும்

நக்கீரன் : காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவருக்கான உட்கட்சி தேர்தல் தேதி அறிவிப்பு
கடந்த சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் விலகி நேற்று தனிக் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார்.
இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியின் செயற்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் தற்காலிகத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் கட்சியின் உயர் அதிகாரம் கொண்டவர்கள் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றனர்.
சோனியா காந்தி,  ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதால் மூவரும் காணொளி மூலம் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டம் முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர்கள், காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அக்டோபர் 17ம் தேதி நடைபெற உள்ளதாகவும் உட்கட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 19ம் தேதி நடைபெற உள்ளதாகவும் கூறினர். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து விலகியதற்கு கண்டனங்களை தெரிவித்தனர்.

கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால் அப்போதைய கட்சித் தலைவர் ராகுல் காந்தி பதவி விலகினார். இதன் பின் சோனியா காந்தி இடைக்காலத் தலைவராக பொறுப்பேற்றார். முழு நேரத் தலைவரை தேர்ந்தெடுக்க முதலில் செப்டம்பர் மாதம் தேர்வு செய்யப்பட்டு தற்போது அக்டோபர் 17ல் கட்சித் தேர்தல் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: