ஞாயிறு, 10 ஜனவரி, 2021

ராமதாஸ் ஆரம்பித்து வைத்த ஆணவக்கொலை கலாச்சாரம் .. நாவிதர் - தெலுங்கு செட்டி ...

Image may contain: 1 person, outdoor
தோழர் ஜீவகன் : கரூர் ஜாதி ஆணவக்கொலை. ஆணவக்கொலை என்றதுமே அது SC பசங்க சம்பந்தப்பட்ட விவகாரம் என்று பொதுப்புத்தி விலகிச் சென்று விடுகிறது. கொலை செய்யப்பட்டுள்ள ஹரிஹரன் நாவிதர் (MBC) வகுப்பை சேர்ந்தவர். கிடைத்த செய்திகளின்படி, கொலை செய்த குடும்பம் தெலுங்கு செட்டி. ஹரிஹரன் - மீனா இருவரது காதலுக்கும் கடும் எதிர்ப்பு இருந்து வந்துள்ளது. மீனாவை தான் திருமணம் செய்வேன் என்று ஹரிஹரன் உறுதியாக நின்றிருக்கிறார்.
விளைவாக, அம்பட்டையனுக்கு எங்க பொண்ணு கேக்குதோ என்கிற வசையுடன் கல்லால் அடித்தும் கத்தியால் குத்தியும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தலித் அல்லாத ஜாதிகளின் கூட்டமைப்புக்காக சுற்றிச் சுழன்று பாமாக்கா ராமதாஸ் கூட்டங்களை ஏற்பாடு செய்து ஜாதி வெறியை தூண்டியதன் விளைவாகவே தமிழகத்தில் அடுத்தடுத்து
ஆணவப் படுகொலைகள் நடக்கத் துவங்கின.
இளவரசன் - திவ்யா,
சங்கர் - கௌசல்யா, கோகுல்ராஜ் - சுவாதி என தேடித்தேடி பட்டியலின இளைஞர்கள் மட்டும் கூலிப்படை உதவியுடன் கொலை செய்யப்பட்டனர்.
ராமதாசின் நச்சுப் பரப்புரையானது காதலே ஒரு நாடகம் தான் என்கிற கேவலமான மனநிலையை சத்திரிய வீரம் பேசும் இளைஞர்களிடத்து உருவாக்கியது. இதனால் பொள்ளாச்சியில் பல இளம்பெண்கள் மோசமான பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாகினர்.
ஜாதி உளவியல் வெறிபிடித்த இளைஞர்களுக்கு பாஜாக்கா, பாமாக்கா வை விட, நாதக வே நல்ல முகமூடியை செய்து தந்துள்ளது.
அது ஜாதியை 'குடி அடையாளமென' பசப்புகின்றது.
ஆனால், ஆணவப்படுகொலை என்பது இந்துச் சமூகத்தில் படிநிலைப்படுத்தப்பட்ட அத்தனை ஜாதிகளுக்கு இடையேயும் நடக்கும் என்பதை இயக்குநர் சீமானும் அவரது தம்பிகளும் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.
சங்கிகளான எல் முருகன்,
மாரிதாஸ்,அர்ஜூன் சம்பத் ஆகியோர் தம் சமூக இளைஞர்கள் ஆணவப்படுகொலை ஆவதற்குக் காரணம், மனுஸ்மிருதி கட்டமைப்பே என்பதை உணர மறுப்பவர்களாக உள்ளனர்.
காதல் என்கிற இயற்கை உணர்வை எப்படி கையாளுவதென கற்பிக்க வேண்டிய தேவை சமூகத்தில் இருக்கிறது. ஆனால், ஜாதி வெறி உளவியலில் நின்று கொண்டு, காதலை நாடகமென சித்தரித்தால் அங்கு பாலியல் வல்லுறவுகளும், ஆணவப் படுகொலைகளுமே பெருகும் என்பதை அழுத்தமாகக் கூறுவோம்.

1 கருத்து:

Unknown சொன்னது…

ராமதாஸ் மற்றும் பாமக மூலம் எவ்வளவோ நல்லது நடந்துள்ளது, அதையும் நீங்கள் சொல்லலாமே