வெள்ளி, 15 ஜனவரி, 2021

சமசுகிருதம் தனித்த மொழியா? சமஸ்கிருதம் . தமிழுக்கு சமமாக உருவாக்கப்பட்ட மொழி .. சம + கிருதம்

kuthoosi.wordpress.com : சமசுகிருதம் என்றால் சமமாக செய்யப்பட்டது என்று பொருள், சித்தர்களால் தமிழுக்கு சமமாக செய்யப்பட்டது (சம + கிருதம் ) சமம் என்ற தமிழ்ச் சொல்லும் கிருதம் (செய்யப்பட்டது) என்ற சமசுகிருத  சொல்லையும் சேர்த்தே நாடோடிகளான வட ஆரியர்களுக்கு சமைத்து தரப்பட்ட மொழி. இதன் காரணமாகவே சமசுகிருதம் ஒரு தனித்தன்மை கொண்ட மொழியாக கருதப்பட முடியாது. ஒப்பாரும் மிக்காரும் இல்லாத என் தாய் மொழி தீந்தமிழ் மொழி இதன் சிறப்பை தமிழர்கள் உணரும் வரை சமசுகிருத மொழியில்தான் எல்லாம் உள்ளது என்று சமசுகிருத மொழியில் ஒரு சொல் கூடத்தெரியாத கும்பல் பொய் சொல்லித் திரிய முடியும். ....

இப்பதிவில் தமிழிலிருந்துதான் சமசுகிருதம் யாசகம் பெற்றே ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைத்து உலக மக்களை ஏமாற்றிவருகிறது என்பதற்கு உதாரனமாக சில சொற்களை பார்ப்போம். அதற்கு முன் ஒரு வேண்டுகோள், கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்கள் தமிழில்லை அது வடமொழி அல்லது சமசுகிருதம் என்றும் இது சமசுகிருத நூல்களில் உள்ளதென்று சொல்லும் மக்கள் மறுப்பு தெரிவிக்காமல் சமசுகிருத வேர் சொல்லோடும் , பொருள் படும்படி வழக்காட்டுச் சொல்லோடும் வாதிடலாம் இல்லையேல் வழக்கம் போல் பிறாமண துவேசி என்று கூறிவிட்டு சென்றிடலாம்.

  • Brother என்ற ஆங்கில சொல் சமசுகிருத மொழியில் உள்ள ப்ராதா என்ற சொல்லிலிருந்து பிறந்தது என்று சொல்லும் நபர்களிடம் ப்ராதா என்ற சொல்லின் வேர் சொல் கேட்டால் திணறுவார்கள்,  ப்ராதா என்ற சொல் தமிழில் பிரிதொருவன் என்ற சொல்லிலிருந்தே சமசுகிருதத்திற்கு சென்றது பிரிது ஒருவன், பிரிந்து பிறந்தவர்கள் என்றும் சொல்லலாம் ஏனெனில் பிரிதொருவன் என்ற சொல் இரட்டையர்களுக்கு சேரா
  • சுயம்பு – சுயம் + அம்பு அதாவது சுயமாக தோன்றிய ( இன்றும் சில வடிவங்களில் கூழாங்கற்கள் நீர் வீழ்ச்சிக்கு அருகில் பார்க்கலாம் )  அம்பு, இலிங்கத்தின் மேற்பகுதியை அம்பு என்று தமிழிலும் , பாணம் என்று சமசுகிருதத்திலும் சொல்லும் வழக்கம். சுயம்பு என்பது தமிழ் சொல்லே. இலிங்கம் என்பதும் தமிழ்ச் சொல்லே அதனை பற்றி தனிப் பதிவை பிறகு பதிவிடுகிறேன்
  • அந்தணர் என்ற சொல்லுக்கு பிறாமணர் என்று சமசுகிருதச் சொல் என்கின்றனர் ஆனால் அந்தணர் என்ற தமிழ் சொல்லுக்கு விளக்கமாக திருவள்ளுவர் கூறுவது

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான் (குறள் எண்:30)

அப்படி எல்லா உயிர்களையும் சமமாகத்தான் பார்த்தனரா இப்பிறாமணர்கள்  அல்லது பார்க்கின்றனரா? அந்தணர் என்ற பொருளாழமிக்க தமிழ் சொல்லுக்கு இனையான சொல் சமசுகிருதத்தில் இல்லை.

  • வேதம் , வேதித்தல் , பக்குவமாக சமைத்தல், வேது பிடித்தல், இன்றளவும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சொல்லாக உள்ளது. வேதம் என்ற தமிழ் சொல்லை நான்கு சமசுகிருத வேதம் என்ற சொல்லோடு இனைத்ததால் இது சமசுகிருத சொல் என்று சொல்ல ஆரம்பித்தனர், அதனையும் நம் தமிழறிஞர்கள் ஏற்று அவர்களுக்கு உதவலாயினர்.
  • சதுரம் என்ற சொல்லே சமசுகிருதத்தில் சதுர் என்றாயிற்று அதனையே சதுர் வேதங்கள் என்கின்றனர். சதுர் + வேதம் என்ற இரண்டு சொற்களும் தமிழாக இருந்தும் அது தன்னுடையது என்று வாதம் செய்கின்றனர்
  • விதை என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வித்யா என்ற சொல் தோன்றியது.
  • ஏகன்/அனேகன் என்ற தமிழ்ச் சொல்லே சமசுகிருதத்தில் ஏக் அநேக் என்றுள்ளது
  • நாதன் என்ற சொல்லே நாத் என்று சென்றது
  • பிண்டம் என்ற தமிழ்ச் சொல்லே பிண்டா என்று சமசுகிருதத்திற்கு சென்றது
  • சகடம் சக்கரம் எப்படி சுற்றுகிறதோ அதுபோன்று உலகம் சுற்றுகிறது என்பதாக சகடம் ஆயிற்ற்ய் அதுவே ஜகத் என்று சமசுகிருதமாயிற்று, பூரியில் உள்ள சகடநாதரை  ஜகன்நாத் என்றனர்
  • ஹவிஸ் என்ற சொல் நெருப்பு வளர்த்து செய்யும் பூசைகளில் தீயில் இடப்படும் சமைத்த உணவு இதன் வேர் மிகவும் சுலபமான தமிழ்ச் சொல்தான் அவித்த உணவு என்பதே, பொருள் புரியாததால் எதோ மிகப்பெரிய பொருள் கொண்ட சொல்லாக நினைத்து நம்மை ஏமாற்றுகின்றனர்.
  • ரவி என்ற சொல்லுக்கு சூரியன் என்று சமசுகிருதத்தில் சொல்வார்கள் ஆனால் அதன் வேர் சொல் அறியவேண்டுமெனின் தமிழுக்குத்தான் வரவேண்டும் இரவி குலம் -> இரவில்லாதா குலம் சூரிய குலம் சோழர் குலம்.
  • கணபாடிகள் என்று சமசுகிருத வேதம் படித்தவர்களின் நிலைகளில் ஒரு நிலையுண்டு, கணபாடிகள் இது பொதுவாக பாடப்படுவதே இதுவும் தமிழ்ச் சொல்லே
  • கீதை கதை காதை கவிதை போன்று கீதையும் தமிழே. கீதை என்பது பாடிகாட்டி தத்துவங்களை சொல்வது.
  • நைவேத்தியம் -> நெய் வேத்தியம் -> நெய்யினால் வேதிக்கப்பட்டது  அதாவது நெய்யினால் பக்குவமாக சமைக்கப்பட்டது
  • அர்ச்சனை – இதுவும் ஆழமான பொருள் கொண்ட தமிழ் சொல். அருட்சினை. அருளை நம்மில் சினையாக்குதல் என்ற பொருள் படும்படி உள்ள அழகிய சொல்லை அர்ச்சனை என்றனர் பொருளும் இல்லை அருளும் இல்லை
  • பத்தியே பக்தியாயிற்று, ஒரு குருவையோ அல்லது கடவுளையோ அல்லது கொள்கையையோ கோட்பாட்டையோ பற்றிக்கொள்ளுதலே பக்தி என்ற பொருளற்ற சமசுகிருத சொல்லாயிற்று
  • சத்தான உணவு , சத்தியம் போன்ற சொற்களின் மூலமே சத்தி அதனை சக்தி என்று திருடினர்
  • முத்திய தேங்காய், முற்றுப் பெறுதல் என்பதனை அடிப்படையில் இனி பிறவி கடலில் உழல வேண்டாம் என்பதாக ஆழமான பொருளை கொண்ட முத்தி என்ற சொல்லை முக்தி என்றனர்.
  • பிரளய் அல்லது பிரளயம் என்று சமசுகிருதத்தில் சொல்லப்படும் பேரழிவு சொல் பேர் அலை என்ற கடல் கோள்களை குறிக்கிறது அதாவது நீரால் அழிவு, தமிழ் மொழியும் இனமுமே மட்டுமே கடல்கோள்களை கண்டுள்ளது
  • சித்தர்களின் பாடல்களில் பத்தி , சத்தி, முத்தி என்ற சொற்றொடரே இருந்தும் நமது தமிழறிஞர்களும் பக்தி, சக்தி , முக்தி என்று எழுதுவதே சமசுகிருத திருட்டை ஆதரிக்கும் நிலை
  • பலம் என்ற சொல்லை பயன் படுத்தும் இந்திய மொழிகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டாலும் பொருள் வேண்டுமெனில் தமிழ் மொழிக்கே வந்தாக வேண்டும்… ஒன்று -> பல என்பதன் பொருள், அதாவது ஒரு இராமன், பல இராமன் -< பலராமன்
  • பாலன் என்ற சொல்லும் இந்திய மொழிகளில் பயன்படுத்தியும் அதன் வேர் சொல்லை புரிந்தால் அச்சொல்லின் வேர் புரிந்துவிடும்.. பால் + உகன் -> பாலுகன் -> பாலன்-> பால் அருந்தும் பருவத்தில் உள்ளவர்.
  • தேசம் –  தேசு – ஒளி மிகுந்த ஒரு பொருள், இதனை தேஷ் என்றனர்
  • த்ரிவிக்கிரமா, திரு விக்கரமன் என்ற பெயரையே திருடி கொண்டு வடமொழியாக்கினர்
  • விக்ரமாதித்யன் – விக்ரம ஆதித்தன் என்ற அழகிய தமிழ் பெயரையும் திருடினர்
  • ந்ருசிம்மன்.. நரன் (மனிதன்) + சிம்மன் (சிங்கம்) என்ற இரு தமிழ் சொல்லை மறக்கடிக்க ந்ருசிம்மன் என்று இன்றும் சொல்கின்றனர்.
  • இலட்சும், இலட்சுமனன், தமிழில் இலக்குவனன் என்பார்கள் இலக்கை கொண்டு செயல்படுபவன், இலட்சியம் இலக்கை மையமாக கொண்டு
  • வாநரம் -> வால் கொண்ட நரம்
  • ஆதாரம் என்ற தமிழ்ச் சொல்லையே ஆதார் என்று எடுத்துச்சென்று இந்தியர் அனைவருக்கும் ஆதார் அட்டையை தமிழின் அடையாளமாக தருகிறது

என்பன போன்ற பல  தமிழ்ச் சொற்களை திரித்து திரிக்காமலும் தன்னகப்படுத்தி அனைத்தும் தன்னிடமுள்ளது என்கிறது சமசுகிருதம் , மேலும் பல சொற்களின் பட்டியல்

மேலும் பல தமிழ் சொற்களை நாம் இழந்தோம் அதில் நமக்கு அதிக பங்குண்டு என்ற உணர்வும் குற்றவுணர்வுமே நாம் இனி அந்த தவறை செய்யாமல் இருக்க நமக்கு விழிப்புணர்வு தரும்

இந்தியாவில் உள்ள பெருன்பான்மையான மக்களால் மிகவும் உயர்வாகவும் புனிதமாகவும் கருதப்படும் சமசுகிருத மொழி உயர்தனித்துவம் கொண்ட மொழியா என்ற ஆராய்ச்சி செய்ய அவர்களுக்கு மனம் வராது. ஆனால் தமிழிலிருந்துதான் சமசுகிருதம் பிறந்தது என்று சொல்லும் தமிழர்கள் பலர் ஒன்றிணைந்து சமசுகிருதம் எனும் மொழி ஓர் ஊனமுற்ற மொழி அம்மொழிக்கு தமிழும் தமிழரும் செய்த நன்மையை மறந்து ஒரு நன்றி கெட்ட மொழி என்பதனை இந்திய மக்களுக்கும் உலக மக்களுக்கும் நாம் பறை சாற்றவேண்டும். இல்லையே காலை சுற்றிய பாம்பாக நம்மையும் நம் மொழியையும் அழிக்கத்துடிக்கும் இனம் தன் செயலை சாதித்தே தீரும்.

சமசுகிரு மொழியிலிருந்து பல மொழிகள் தோன்றின என்பதை கொச்சையாக விமர்சிக்க வேண்டுமெனின் சமசுகிருதம் எனும் மலடி பத்து பிள்ளைகளை பெற்றால் என்று சொல்வதற்கு சமமாகும்

தமிழிலிருந்து பிறந்த சமசுகிருதம் தாந்தான் தமிழுக்கு தாய் என்று கூறுவது என் தாத்தாவிற்கு நாந்தான் பெயர் சூட்டி அவரை தூக்கி வளர்த்தேன் என்பது போலாகும்.

சித்தர்களால் சபிக்கப்பட்டு பேச்சுவழக்கொழிந்த இந்த சமசுகிருதத்தின் மேன்மைக்காக போராடும் எவருக்கும் நிலையான வாழ்வோ வீடுபேறோ கிடைக்காது. அவர்களின் வாழ்வு மிகப்பெரிய வீழ்ச்சிக்கும் அவலத்திற்கும் ஆளாகும் அதே நிலைதான் இப்போதைய அரசுக்கும் உரித்தாகும்.

”இந்துக்கள் கோயில்களில், பூசைகளில் சமசுகிருதத்தைப் பயன்படுத்துவது பெரிய பாவம், கொடிய தீட்டு, நெடிய சாபம்” – தஞ்சைப் பெரிய கோயிலை கட்டிய சித்தரின் குருபாரம்பரிய வாசகம்

கருத்துகள் இல்லை: