செவ்வாய், 2 ஏப்ரல், 2019

2016 இல் பஜகாவின் நயினார் நாகேந்திரன் சொத்து 10 கோடி ..2019 இல் நயினார் சொத்து 91 கோடி .. மூன்று வருட வீக்கம்

புதிய இந்தியா :  வேட்புமனு தாக்கல் செய்யும் போது கடைசியில் சரிபார்ப்பு என்ற தலைப்பின் அடியில்,
"மேற்சொன்ன பெயரை உறுதியளிப்பவராகிய நான், எனக்கு நன்கு தெரிந்த வரையிலும் நம்பிக்கைக்கு உகந்த வகையிலும் இந்த உறுதிமொழிப் பத்திரத்தில் உள்ளவை உண்மையானது மற்றும் சரியானது என்றும், எந்த பகுதியும் பொய்யானவை அல்ல என்றும், எவையும் இதிலிருந்து மறைக்கப்படவில்லை என்றும் இதனால் சரிபார்ப்பு செய்து உறுதியளிக்கிறேன்" என்று கையெழுத்து போட்டிருப்பார்.
ஆனால் அந்த உறுதிமொழிக்கு எத்தனை வேட்பாளர்கள் மரியாதையளிக்கிறார்கள் என்று பார்த்தால் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கும். அதற்கு சிறந்த உதாரணம் பிஜேபியின் ராமநாதபுரம் வேட்பாளர் நயினார் நாகேந்திரன். இவர் குறிப்பிட்டுள்ள சொத்து கணக்குகளை கூட்டி கழித்து பார்த்தால் வரும் தொகை 9,13,60,448.99 ஆனால் இவர் தனது சொத்து மதிப்பாக குறிப்பிட்டிருக்கும் தொகை 91,77,78,468.99. ஏதாவது ஒரு எண்ணை தவறுதலாக குறிப்பிட்டிருந்தால் கூட தெரியாமல் எழுதிவிட்டதாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இங்கு அனைத்து இலக்கங்களும் மாறி இருக்கின்றன. சொத்துக்களை கணக்கு காட்ட தவறி விட்டாரா அல்லது இத்தனை அலட்சியமாக கணக்கு போட்டுள்ளாரா? வேட்புமனு சரிபார்த்தல் என்ற ஒரு விஷயத்தை செய்யும் தேர்தல் ஆணையம் எதை தான் சரிபார்க்கிறது? இப்படி தவறாக தகவல் கொடுக்கும் வேட்பாளர்களுக்கு என்ன தான் தண்டனை?

உங்கள் தொகுதி வேட்பாளர்கள் வேட்புமனுவை பார்க்க https://affidavit.eci.gov.in/
வேட்பாளர்கள் விவரங்களை இணையத்தில் பதிவேற்றி அவர்கள் விவரங்களை மக்களுக்கு தெரியப்படுத்த அறப்போர் இயக்கத்துடன் இணைந்து பணி செய்ய உங்களுக்கு விருப்பம் இருந்தால் 9945244490 / 8072902947 அழையுங்கள்.

கருத்துகள் இல்லை: