வெள்ளி, 29 ஜூன், 2018

மறைந்த காடுவெட்டி குருவை கைவிட்டது காலமா? கட்சியா? ஜாதியா?

Click to see big
Anirutha Brammarayan : சமீபத்தில் மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் மாவட்டம் மட்டுமல்லாது வட தமிழகம் முழுவதுமே காடுவெட்டி குருவின் கட்டப் பஞ்சாயத்துகள் புகழ் பெற்றவை. அவர் பெயரைச் சொல்லி வசூலிக்கப்படும் தொகைகளும் கப்பங்களும் அனைவரும் அறிந்ததே. பிறகு எப்படி கடனில் சிக்கினார், மருத்துவ தலைமையும் கைவிட்டு விட்டதா என விசாரணையில் இறங்கினோம். கிடைத்த தகவல்கள் பகீர் ரகம்.
காடுவெட்டி ஜெ.குருவின் குடும்பம் கடனில் சிக்கித் தவிப்பதாகவும் கடன் தொல்லை தாங்க முடியாமல் டெம்போ டிராவலர் வேனை உடனடியாக விற்க முடிவு செய்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. ஏற்கனவே நெற்றிக்கண் போன்ற பத்திரிக்கைகளிலும், பண்ருட்டி வேல்முருகன் பேட்டியிலும் காடுவெட்டி குருவின் குடும்பம் சிகிச்சைக்கு கூட பணமில்லாமல் கடும் நெருக்கடியில் இருப்பதாக அரசல் புரசலாக பேசப்பட்டது. தற்போது அது உண்மையென பொதுவெளிக்கு வந்துவிட்டது. அரியலூர்
காடுவெட்டிக்கு உள்ளுரில் ஓர் தளபதி உண்டு. 'வைத்தி' என்று பெயர். உண்மையான அமைதிப்படை அம்மாவாசை. ஆண்டிமடம் கார் ஸ்டேண்டில் 1996ல் கிளினர். ரஜினி ரசிகர் மன்றம், ம.தி.மு.க வழி பயணித்து குருவிடம் சென்று சேர்ந்தார்.
ஒரு கட்டத்தில் குருவுக்கு எல்லாமும் ஆனார். மாவட்ட செயலாளர் ஆனார். வன்னியர் சங்கம், பா.ம.கவை வளர்த்தவர்கள் ஓரம் கட்டப் பட்டார்கள். குருவின் நம்பிக்கைக்கு உரியவர்கள் பதவிகளிலிருந்து வெளியேற்றப் பட்டார்கள். குரு மாநிலப் பொறுப்புக்கு போய் விட்டதால், இதில் கவனம் செலுத்த முடியவில்லை.
மொத்த மாவட்டமும் வைத்தி கண்ட்ரோலுக்கு வந்து விட்டது. இடையில் குருவுக்காக இரண்டு கொலைகள் செய்து சிறை சென்று வந்தார் வைத்தி. தாதா ஆகி விட்டார். பஞ்சாயத்துகள் அவர் வசம் சென்றன. குரு பெயரை சொல்லி மிரட்டி, பஞ்சாயத்து முடிக்கப்படும். வசூலில், குருவுக்கு நைவேத்தியம் மட்டும் செய்யப்பட்டு, பெரும் பகுதி வைத்தி கஜானாவுக்கு சென்றது.
குரு, அன்புமணிக்கு செக் வைத்து கொண்டிருந்தார். வைத்தி உடனிருந்து குருவின் சாம்ராஜ்யத்தை கைப்பற்றி விட்டார்.
இந்தக் கட்டத்தில் வைத்தி ஜெயங்கொண்டம் தொகுதியை குறி வைக்க, குரு விடவில்லை. வைத்தி குன்னத்தில் நின்றார். குரு ஓட்டுக்கு பணம் தரவில்லை. வைத்தி ஓட்டுக்கு ரூ 100 கொடுத்தார்.
வைத்தி தன் ஊரில் நாலு வீடுகள் கட்டி விட்டார்.. 50 ஏக்கர்களுக்கு மேல் நிலம். இவை வெளியில் தெரிந்தது. கோடிகளில் குவித்து விட்டதாக அவர் கட்சியினரே பேசுகின்றனர். குருவுக்கு சேர வேண்டியதெல்லாம் வைத்தி இடம்.
எதிர் கால கனவுகளில் இருந்த குருவுக்கு உடல் நலம் கெட்டுப் போனது. வைத்தியம் செய்ய சிங்கப்பூர் போக அறிவுரை வழங்கப்பட்டது. 40 லட்சம் தேவை என்ற நிலையில் திரட்ட முடியவில்லை. தலைமையும் கை விரித்து விட்டது. வைத்தியும் கை விரித்து விட்டார்.
இது உண்மை நிலை தான்.
குரு கட்ட ஆரம்பித்த வீடு முழுமை பெறாமல் நிற்கிறது.
இந்தக் காரணங்களால் தான் குரு இறந்த அன்று அன்புமணிக்கு எதிர்ப்பு காட்டப்பட்டது. இன்றும் முணுமுணுப்பு இருக்கிறது.
கத்தியைத் தீட்டிய நேரத்தில் கொஞ்சம் புத்தியைத் தீட்டியிருக்கலாமே குரு....

கருத்துகள் இல்லை: