செவ்வாய், 26 ஜூன், 2018

கேரளா : ஐந்து பாதிரியார்கள் பெண்களை மிரட்டி பலமுறை பாலியல் உறவு .. Kerala: 5 Priests Use Woman's Confession to Blackmail, Sex...

Five priests of Malankara Orthodox Syrian Church in Kerala were sent off on leave after they were accused of sexually abusing and blackmailing a woman over the last few years. The woman’s husband, in his complaint, had alleged that his wife’s confession to one of the accused priests was supposed to be a secret but was rather used to blackmail her.
கேரளாவில் தேவாலயத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை பாலியல்
வன்கொடுமைக்கு ஆளாக்கியது தொடர்பாக 5 பாதிரியார்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் மலங்கராவில் ஆர்தடாக்ஸ் தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயம் உள்ள பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவருடன் வசித்து வருகிறார். அந்தப் பெண்ணுக்கு திருமணத்திற்கு முன் ஆர்தடாக்ஸ் தேவாலயத்தைச் சேர்ந்த பாதிரியார் ஒருவருடன் உறவு இருந்துள்ளது. அப்பெண் தனது இரண்டாவது மகளின் ஞானஸ்தானத்தின் போது, மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார் எனவே திருமணத்துக்கு முன்பு பாதிரியார் ஒருவருடன் உறவு வைத்திருந்ததை மற்றொரு பாதிரியாரிடம் கூறி வருத்தமடைந்துள்ளார்.
இதை ஆடியோவாக பதிவு செய்த அந்தப் பாதிரியார், இதை அப்பெண்ணின் கணவரிடம் சொல்லிவிடுவதாகக் கூறி அவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியிருக்கிறார். தொடர்ந்து தேவாலயத்தில் உள்ள மற்ற 3 பாதிரியார்களுக்கு அனுப்பியுள்ளார். அவர்களும் ஆடியோவை வைத்து அப்பெண்ணை மிரட்டிப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர்.

தொடர்ந்து அந்த ஆடியோ, டெல்லியில் உள்ள ஒரு பாதிரியாருக்கு அனுப்பப்பட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த பாதிரியாரும் கேரளா வந்து தனியார் ஹோட்டலில் தங்கி அப்பெண்ணை மிரட்டி வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் தான் தங்கியிருந்த அறைக்குக் கட்டணம் செலுத்த வற்புறுத்தியிருக்கிறார்.
அந்தப் பெண்ணும் டெபிட் கார்டு மூலம் கட்டணம் செலுத்தியுள்ளார். இதுகுறித்த குறுஞ்செய்தி அப்பெண்ணின் கணவர் கைப்பேசிக்குச் சென்றுள்ளது.
இதுகுறித்து அவர் தனது மனைவியிடம் விசாரித்துள்ளார். பின் நடந்தவற்றை அப்பெண் கணவரிடம் கூறியுள்ளார். பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாகத் திருச்சபையில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் பேரில் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய ஐந்து பாதிரியார்களும் தேவாலயத்தில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சபை செய்தித் தொடர்பாளர் எலியஸ், “ஐந்து பாதிரியார்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அடுத்து, அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையா என்று எங்களுக்குத் தெரியாது. விசாரணைக்குப் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார், எனினும் பாதிரியார்களுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: