திங்கள், 25 ஜூன், 2018

வடிவேலுவின் இம்சை அரசன் 24 புலிகேசி மீண்டும் படப்படிப்பு ... இறங்கி வந்த வடிவேலு

Siva - Oneindia Tamil சென்னை: 24ம் புலிகேசி பிரச்சனை முடிவுக்கு வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. 
சிம்புதேவன் இயக்கத்தில் உருவான இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் ஹிட்டானதை அடுத்து பல ஆண்டுகள் கழித்து அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கத் துவங்கினர். 
24ம் புலிகேசி என்று பெயர் வைத்து ரூ. 7 கோடியில் செட் போட்டு படப்பிடிப்பை துவங்கினார்கள். முதல் பாகத்தை போன்றே இதிலும் வடிவேலு தான் ஹீரோ. 
10 நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் சிம்புதேவன், வடிவேலு இடையே பிரச்சனை ஏற்பட்டு படம் நின்றது. இதையடுத்து படத்தின் தயாரிப்பாளரான ஷங்கர் வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். 
தயாரிப்பாளர் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியும் 24ம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் வடிவேலு. நடிக்க மறுத்தால் நஷ்டஈடாக ரூ. 9 கோடி வாங்கித் தருமாறு ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் மனு அளித்தார். 
 படப்பிடிப்பு நின்றதற்கு தான் காரணம் அல்ல என்று கூறிய வடிவேலு படத்தில் தொடர்ந்து நடிக்க முடியாது என்று கறாராக தெரிவித்தார். மேலும் நஷ்டஈடு கொடுக்கவும் அவர் தயாராக இல்லை.

 ரூ. 9 கோடி கொடுக்காவிட்டால் வடிவேலுவுக்கு ரெட் கார்டு கொடுக்கும் அபாயம் ஏற்பட்டது. இந்நிலையில் அவர் மனதை மாற்றிக் கொண்டு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளாராம். இதன் மூலம் இடியாப்ப சிக்கலில் இருந்து வெளியே வரவுள்ளார் வடிவேலு

கருத்துகள் இல்லை: