ஞாயிறு, 2 அக்டோபர், 2016

அப்பல்லோவில் குவிந்த அமைச்சர்கள் .. டிஜிபி, போலீஸ் கமிஷனருடன் அவசர ஆலோசனை!

Emergency meet with Ministers in Apollo Hospital சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ள அப்போலோ மருத்துவமனையில் அமைச்சர்கள் அவசரமாகக் கூடி சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்கள்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதி உடல்நலக்குறைவின் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை நிர்வாகம் இதுவரை 4 செய்திக் குறிப்புகளை வெளியிட்டு ஜெயலலிதா நன்றாக இருப்பதாகவும் வழக்கமான உணவு உட்கொள்வதாகவும் கூறி வருகிறது. என்றாலும் அவர் தொடர்ச்சியாக மருத்துவமனையிலேயே இருக்கிறார்.'

10வது நாளான நேற்று மாலை தமிழக ஆளுநர் வித்தியாசாகர் ராவ் அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று முதல்வருக்கு அளிக்கப்பட்டுள்ள சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் பேசிவிட்டு சென்றார்.

இந்நிலையில், 11வது நாளான இன்று தமிழக அமைச்சர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் அப்போலோ மருத்துவமனைக்கு அவசரமாக விரைந்து வந்தனர். ஓ.பன்னீர் செல்வம், ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி, சிவிசண்முகம், எடப்பாடி பழனிச்சாமி, விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன் உள்பட அனைத்து அமைச்சர்களும் வந்தனர்.
அதேபோல டிஜிபி ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளும வந்தனர். அங்கு வைத்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடந்ததாக கூறப்படுகிறது. அந்த ஆலோசனைக்குப் பின்னர் அனைவரும் அங்கிருந்து வெளியேறினர். பத்திரிகையாளர்கள் அவர்களிடம் என்ன ஏது என்று கேட்டபோது யாரும் பதிலளிக்கவில்லை  tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: