புதன், 9 டிசம்பர், 2015

டொனால்ட் ட்ரம்ப் :அமெரிக்காவுக்குள் முஸ்லீம்கள் நுழைவதைத் தடுக்க வேண்டும்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளருக்கான போட்டியில் முன்னணியில் இருக்கும் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவுக்குள் முஸ்லீம்கள் நுழைவதைத் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். கலிபோர்னியாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டுக் கொலைகளைத் தொடர்ந்து அவர் இந்த கருத்தை வெளியிட்டிருக்கிறார். >டொனால்ட் ட்ரம்ப் இதுவரை தெரிவித்திருக்கும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய பத்து முக்கிய கருத்துக்கள் மற்றும் அவரது நம்பிக்கைகள் >அமெரிக்க மசூதிகள் கண்காணிக்கப்படவேண்டும். தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக முஸ்லீம்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படவேண்டும் என்று ட்ரம்ப் நம்புகிறார். இதன் ஒரு பகுதியாக மசூதிகள் கண்காணிக்கப்படுவது அரசியல் ரீதியில் ஏற்கத்தக்கக் கருத்தல்ல என்பதைப்பற்றி அவருக்கு கவலையில்லை.

2.;இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அமைப்புக்கு எதிரான சண்டையில் ஒரு அங்கமாக சந்தேக நபர்களை நீரில் மூழ்கடித்து சித்தரவதை செய்வது உள்ளிட்ட பல்வேறு “கடுமையான விசாரணை முறைகளையும்” அமெரிக்க அரசு கையாள வேண்டும். சிரமறுத்துக் கொலை செய்வது உள்ளிட்ட தீவிரவாதிகளின் அணுகுமுறைகளோடு ஒப்பிடும்போது “இந்த முறைகளெல்லாம் ஒண்ணுமேயில்லை” என்கிறார் அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக விரும்பும் டொனால்ட் ட்ரம்ப்."> "ஐ எஸ் அமைப்பை ஒரு கை பார்ப்பேன்" என்கிறார் டொனால்ட் ட்ரம்ப்
3.ஐஎஸ் அமைப்பை “குண்டுபோட்டு அடித்து துவைத்து விடுவேன்” என்கிறார் ட்ரம்ப். இந்த விஷயத்தில் மற்ற எந்த வேட்பாளரும் தன் அளவுக்கு வலிமையுடனும் உறுதியுடனும் கடினமாகவும் இருக்க மாட்டார்கள் என்று கூறும் இவர், ஐ எஸ் அமைப்புக்கும் பெட்ரோலிய எண்ணெய்க்குமான தொடர்பை துண்டிப்பதன் மூலம் அவர்களை பலவீனப்படுத்துவேன் என்றும் கூறுகிறார்.
4. அமெரிக்காவுக்கும் மெக்சிகோவுக்கும் இடையில் மிகப்பிரம்மாண்டமானதொரு மதிற்சுவர் எழுப்புவேன் என்று கூறும் ட்ரம்ப், இதன் மூலம் சட்டவிரோதக் குடியேறிகளையும் சிரிய குடியேறிகளையும் தடுத்து நிறுத்துவேன் என்றும் கூறுகிறார். மெக்சிக்கோவில் இருந்து அமெரிக்காவுக்குள் வருபவர்களில் பெரும்பான்மையானவர்கள் கிரிமினல்கள் என்று அவர் குறிப்புணர்த்துகிறார். “அவர்கள் போதை மருந்தை கடத்திக் கொண்டுவருகிறார்கள். குற்றங்களைக் கொண்டுவருகிறார்கள். அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்பவர்கள்” என்றும் அவர் கூறியிருக்கிறார். அமெரிக்காவுக்கும் மெக்சிகோவுக்கும் இடையிலான சுவர் கட்டுவதற்காகும் செலவை மெக்சிகோ தரவேண்டும் என்றும் அவர் நம்புகிறார். அவர் கூறும் “மாபெரும் சுவர்” கட்டுவதற்கு குறைந்தது 220 கோடி அமெரிக்க டாலர்களும் அதிகபட்சம் 1300 கோடி அமெரிக்க டாலர்களும் செலவாகும் என்று பிபிசியின் ஆய்வில் தெரியவருகிறது.

5.அமெரிக்காவில் வசிப்பதாக கணக்கிடப்பட்டிருக்கும் ஒரு கோடியே பத்துலட்ச சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவதற்கான மிகப்பெரியதொரு திட்டம் நிறைவேற்றப்படவேண்டும் என்று அவர் விரும்புகிறார். இவரது இந்தக் கொள்கை வெளிநாட்டவர் மீதான வெறுப்பை உள்ளடக்கிய பயநோய் என்றும் இவர் கூறும் திட்டத்தை நிறைவேற்ற மிகப்பெரிய பொருட்செலவாகும் என்றும் அவர் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். இதற்கு 11,400 கோடி அமெரிக்க டாலர்கள் செலவாகும் என்று பிபிசியின் கணக்கில் தெரியவந்திருக்கிறது. சட்டவிரோத குடியேறிகளின் பிள்ளைகள் அமெரிக்க மண்ணில் பிறந்தால் அந்த பிள்ளைகளுக்கு அமெரிக்கக் குடியுரிமை கிடைக்கும் என்கிற தற்போதைய நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்.<"> ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் சுமுகமாக இருப்பேன் என்கிறார் டொனால்ட் ட்ரம்ப்

6.ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் இணைந்து செயலாற்றப் போவதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார். தற்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமாவும் ரஷ்ய அதிபர் புடினும் ஒருவரை ஒருவர் மோசமாக வெறுப்பதாகவும், அதனால் அவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தைகள் மூலம் சுமுகமாக இணைந்து செயற்படும் சாத்தியங்கள் இல்லை என்றும் சிஎன்என் செய்திச் சேவைக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்திருந்தார். இதற்கு மாறாக, தான் அமெரிக்க அதிபரானால் புடினுடன் நன்கு பழகுவேன் என்றும் அதன் காரணமாக தற்போதைய பல பிரச்சனைகள் தனது ஆட்சிக்காலத்தில் இருக்கவே இருக்காது என்றும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
7. சீனாவுடனான அமெரிக்க வர்த்தகத்தை "சமநிலைக்கு" கொண்டுவர வேண்டுமானால், சீனாவுக்கு எதிராக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் கருதுகிறார். தான் அமெரிக்க அதிபரானால் சீனா தனது நாணயத்தின் மதிப்பை குறைத்து வைத்திருப்பதை தடுப்பேன் என்று கூறும் ட்ரம்ப், சுற்றுச்சூழல் மற்றும் தொழிலாளர் நலம் ஆகிய இரண்டு பிரச்சனைகளில் சீன அரசு மேலதிக நடவடிக்கைகள் எடுக்கும்படி நிர்பந்திப்பேன் என்றும் கூறினார்.

8. புவி வெப்பமாதல் என்பது சாதாரணமாக பருவநிலையில் ஏற்படும் மற்றும் ஒரு மாற்றம் மட்டுமே என்பது அவரது வாதம். காற்றையும், நீரையும் சுத்தமாக வைத்திருப்பது நல்லது என்று ட்ரம்ப் நம்பினாலும், அதிகரித்த கரியமில வாயு வெளியேற்றத்தால் புவி வேகமாக வெப்பமாகிவருகிறது என்கிற சுற்றுச்சூழல் விஞ்ஞானத்தை வெறும் “வதந்தி” என்று புறந்தள்ளுகிறார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்கிற பெயரில் அமெரிக்கத் தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகள் சர்வதேசச் சந்தையில் அவற்றை வலுவிழக்கச் செய்துவிடும் என்றும் அவர் அஞ்சுகிறார்."> புவி வெப்பமாதல் என்பதே "வெறும் வதந்தி" என்கிறார் டொனால்ட் ட்ரம்ப் >இராக்கில் சதாம் ஹுசைனும் லிபியாவில் முவம்மர் கடாஃபியும் தொடர்ந்து ஆட்சியில் இருந்திருந்தால் உலகம் இன்னும் கொஞ்சம் நல்லபடியாக இருந்திருக்கும் என்று ட்ரம்ப் கருதுகிறார். சிஎன்என் செய்திச் சேவைக்கு அவர் அளித்த பேட்டியில் “மறைந்த அந்த இரண்டு சர்வாதிகாரிகளின்” ஆட்சிக்காலங்களில் லிபியாவும் இராக்கும் இருந்ததைவிட தற்போது அவை படுமோசமான நிலையில் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

10. “உண்மையில் நான் ரொம்ப நல்லவன்”. “முடமான அமெரிக்கா” என்கிற தனது சமீபத்திய புத்தகத்தில், “உண்மையில் நான் நொம்ப நல்லவன், நம்புங்கள். நான் நல்லவன் என்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். அதேசமயம் நம் நாட்டை மீண்டும் மிகச்சிறந்த நாடாக மாற்றிக்காட்ட வேண்டும் என்பதில் நான் உறுதியானவனாகவும் ஆழமான நம்பிக்கை கொண்டவனாகவும் இருக்கிறேன்” என்றும் கூறியிருக்கிறார். bbc.tamil.com 

கருத்துகள் இல்லை: