வியாழன், 23 ஏப்ரல், 2015

சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு விரைவில்! தண்டனையை ஜெயாவின் மனசாட்சிக்கு விடவும் வாய்ப்பு! ( டான்சி தீர்ப்பு )

புதுடில்லி: அளவுக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக போடப்பட்டுள்ள வழக்கில், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள மேல் முறையீட்டு வழக்கில், அரசு தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் தொடரலாமா என்பது குறித்த தீர்ப்பை, 27ம் தேதி வழங்குவதாக, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நேற்று அறிவித்தனர். இதனால், தனக்கு விதிக்கப்பட்டுள்ள நான்காண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து, ஜெயலலிதா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. Jeyalalithaa சொத்து   குவித்தார் என்று தான் வழக்கு. லஞ்சம் வாங்கினார் ஊழல் செய்தார் என்று குற்ற சாட்டும் இல்லை, ஆதாரமும் இல்லை. எனவே சொத்து குவிப்பிற்கு வருமான வரி துறையே நடவடிக்கை எடுத்து கொள்ளலாம். இதனை கோர்ட்டில் வழக்கு பதிவு செய்தது சட்டத்திற்கு புறம்பாணது. இத்தனை வருடங்கள் செலவு செய்து வழக்கு நடத்தியது வீண் விரயம். இப்போதாவது விழித்து கொண்டு சொத்து குவிப்பு வழக்கை தள்ளுபடி......ம்ம்ம் இப்படியும் தீர்ப்பு வரலாம்!


வருமானத்திற்கு அதிகமாக, 66 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக, ஜெயலலிதா மீது, 1996ல், இப்போதைய, பா.ஜ., மூத்த தலைவரும், அப்போதைய ஜனதா கட்சித் தலைவருமான சுப்பிரமணியன் சாமி வழக்கு தொடர்ந்தார்.பல தடைகளை தாண்டிய அந்த வழக்கு, கடந்த ஆண்டு செப்டம்பர் 27ல் முடிவுக்கு வந்தது. பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, ஜெயலலிதாவுக்கு, நான்காண்டு சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்தார்.அது போல, அந்த வழக்கில் தொடர்புடைய, ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்கள் சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு, தலா, நான்காண்டு சிறைத் தண்டனையும், தலா, 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி குன்ஹா உத்தரவிட்டார். மேல்முறையீட்டு வழக்கு: இதையடுத்து,நான்கு பேரும் கைது செய்யப்பட்டு, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர். ஜெயலலிதா மற்றும் மூவர் சார்பில், தண்டனையை ரத்து செய்யக் கோரி, பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், நான்கு பேருக்கும் ஜாமின் வழங்கிய சுப்ரீம் கோர்ட், மே 12க்குள், மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை முடிக்கவும், தேவைப்பட்டால் தேதியை நீட்டிக்கவும், பெங்களூரு உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. அதன் படி, நீதிபதி குமாரசாமி தலைமையில் சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டு, அந்த அமர்வு, ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனுவை விசாரித்து வருகிறது.

இந்நிலையில், 'தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா தரப்பில் தொடரப்பட்டுள்ள அந்த வழக்கில், அரசு வழக்கறிஞராக, பவானி சிங் ஆஜராகக் கூடாது' என, தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில்வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், கடந்த வாரம், இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். விசாரணை நிறைவு: இதையடுத்து, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா தலைமையில், ஆர்.கே.அகர்வால், பி.சி.பந்த் ஆகியோரை கொண்ட அமர்வு முன், அன்பழகன் வழக்கு மாற்றப்பட்டது. இரண்டு நாட்கள் காரசாரமாக நடைபெற்ற விசாரணை, நேற்று நிறைவடைந்தது.தீர்ப்பை, 27ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், 'அரசு தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் நியமிக்கப்பட்டதில், பல குளறுபடிகள் நிகழ்ந்துள்ளன என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அதற்காக, 18 ஆண்டுகளாக தொடரும் இந்த வழக்கை, முதலில் இருந்து விசாரிக்க உத்தரவிடுவதும் சரியாக இருக்காது' என்றனர்.
ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையில், பவானி சிங் தொடர்வாரா, இல்லையா என்பது, திங்கள் கிழமை தெரிந்து விடும். பெங்களூரு உயர் நீதிமன்றத்தில், நீதிபதி குமாரசாமி தலைமையில், மேல் முறையீட்டு வழக்கு விசாரணை முடிவடைந்திருந்த நிலையில், பவானி சிங் வழக்கு குறுக்கிட்டதால், தீர்ப்பு தாமதமாகியது.வரும் திங்கள் கிழமை, பவானி சிங் வழக்கில் தீர்ப்பு வெளியாவதால், மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பும், விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறதினமலர்.com 

கருத்துகள் இல்லை: