ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

புலி உறுப்பினன் ஒருவன் வந்து என்னை வரும்படி அழைத்தான்.


11. ‘காந்தி தரிசனம்’ கிடைத்தது!
ltte torture campகாந்தி தரிசனத்துக்காக’ நான் காத்திருந்த வேளையில், புலி உறுப்பினன் ஒருவன் வந்து என்னை வரும்படி அழைத்தான். என்ன நடக்கப் போகிறதோ என்ற அச்சம் ஒருபுறம் இருந்தாலும், காந்தியின் பெயரை விரும்பிச் சூடியிருக்கும் ஒருவன், குறைந்த பட்சம் கொஞ்சமாவது இரக்க சுபாவம் உள்ளவனாகத்தான் இருப்பான் என்று எண்ணினேன். இந்திய அமைதிப்படை இலங்கையில் நிலை கொண்டிருந்த காலத்தில், காந்தியம் பற்றி எதிரும் புதிருமான இரண்டு வியாக்கியானங்களை நான் பார்த்திருந்தேன். ஒன்று, புலிகளுக்கும் இந்திய அமைதிப்படையினருக்கும் இடையில் யுத்தம் மூண்ட பின்னர், இந்தியப் படையினரின் செயலை விமர்சிக்கும் முகமாக, யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறை வீதியும், ஸ்ரான்லி வீதியும் சந்திக்கும் முட்டாசுக்கடைச் சந்தியில் அமைந்திருந்த விவேகானந்தா அச்சகச் சுவரில், பெரிய சிவப்பு எழுத்துகளில் வாசகம் ஒன்று எழுதப்பட்டிருந்தது. அந்த வாசகத்தில் பின்வருமாறு குறிப்பிப்பட்டிருந்தது. ‘கோட்சே காந்தியைக் கொன்றான். ஆனால் ராஜீவோ காந்தியத்தையே கொலை செய்துள்ளான்”. அதாவது கோட்சேயை விட, ராஜீவ் மோசமானவர் என்பதுதான் அதன் சாராம்சம். அதற்காகத்தான் பின்னர் புலிகள், ராஜீவை பெண் தற்கொலைக் குண்டுதாரி மூலமாகக் கொலை செய்தார்களோ என்னவோ? இன்னொன்று, இந்திய அமைதிப்படை நிலை கொண்டிருந்த காலத்தில், பொதுமக்களுடன் தொடர்பு கொள்வதற்காக, இந்திய இராணுவ உயர் அதிகாரிகள், ஒவ்வொரு பகுதிகளிலும், அந்தந்த ஊர்களில் உள்ள பல்துறைப் பிரமுகர்களைக் கொண்டு, பிரஜைகள் குழுக்களை அமைத்திருந்தனர். அவ்வாறான ஒரு குழுவின் கூட்டமொன்றில் பங்குபற்றும் ஒரு சந்தர்ப்பம், ஒருமுறை எனக்கும் கிடைத்தது. (மேலும்)

கருத்துகள் இல்லை: