வெள்ளி, 2 ஏப்ரல், 2010

சுட்டுக்கொன்றதன் பின்னர் எம்பி பதவியை பெற்றுக்கொண்டார்.

தமிழ் தேசியம் என கோஷம் கிளப்புகின்ற சம்பந்தன் மாவை போன்றோர் தமது தலைமுறைகளை செல்வந்த நாடுகளில் குடியேற்றியிருக்கின்றார்கள். இவர்களுக்கு தமிழ் தேசியத்தில் பற்று இருந்திருக்குமாக இருந்தால் தமிழ் தேசியம் என்ற கோஷத்துடன் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைத்திருக்கவேண்டும். மாறாக மாவை தனது ஒரு புதல்வியை பிராண்சிலும் ஒரு புதல்வியை லண்டனிலும் திருமணம் செய்து கொடுத்துள்ளதுடன் சம்பந்தன் தனது புதல்விக்கு கொச்சினில் திருமணம் செய்துகொடுத்திருக்கின்றார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தேர்தல் பிரச்சார மேடை ஒன்றில் மேற்கண்டவாறு கூறிய பிள்ளையான மேலும் பேசுகையில், ஒஸ்லோ பிரகடணத்தின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்றுத்தரப்போவதாக கூறுகின்றார் அரியநேந்திரன். அதன் பொருட்டு வன்முறை கலாச்சாரம் கொண்ட கட்சிகளை நிராகரிக்க கோருகின்றார். நான் இங்கு கேட்பது யாதெனில் யார் வன்முறைக் கலாச்சாரம் கொண்டவர்கள். மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் சேவகனான கிங்ஸ்லி ராஜநாயகத்திடம் புலிகளுடன் இணைந்து பலாத்காரமாக இராஜனாமா கடித்தை பெற்றுவிட்டு அவரை சுட்டுக்கொன்றதன் பின்னர் எம்பி பதவியை பெற்றுக்கொண்டார். இச்செயலை வன்முறை என்று சொல்லாமல் எவ்வாறு என்ற கேள்வியை எழுப்பினார்.

கருத்துகள் இல்லை: