கோவை ஒன்றும் குற்றமே இல்லாத நகரம் இல்லை. சிறுசிறு சம்பவங்கள் நடந்தபடிதான் இருக்கின்றன. ஆனால், இரு பிஞ்சுகளின் கொலை இதுவரை கோவை கண்டிராத ஒன்று. பள்ளிக்கு வழக்கமாக செல்வதற்காக குழந்தைகள் காத்திருக்கின்றன. வழக்கம் போல் கார் வருகிறது; நீண்ட நாட்களாக வராத டிரைவர் வருகிறார். ஆனால், ஏற்கனவே நன்கு பழக்கமான டிரைவர் என்பதால், தம்பியுடன் வாகனத்தில் நுழைகிறாள் அச்சிறுமி.அதற்குப்பின் நடந்தது சோகசம்பவம். குழந்தைகள் கடத்தப்பட்டதை, மிக தாமதமாக உணரும் பெற்றோர், போலீசில் புகார் செய்கின்றனர். போலீஸ் சுறுசுறுப்பாக செயல்பட்டபோதும், நிலைமை கைமீறி விட்டது. கோவையில் இருந்து 70 கி.மீ., தூரத்தில் உள்ள உடுமலை அருகே பி.ஏ.பி., கால்வாயில் புத்தகப்பை மிதக்கிறது என்ற தகவல், விபரீதம் நிகழ்ந்திருப்பதை சுட்டிக்காட்டியது.போலீசாரின் வாகன சோதனையில் குற்றவாளி சிக்கினான்.
"பணத்துக்காக கடத்தினேன். மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தில், கால்வாய்க்குள் குழந்தைகளை தள்ளிவிட்டேன்' என "பகீர்' தகவலை அந்த கொடூரன் சொல்ல, அலறியடித்தபடி கால்வாயில் தேடியது போலீஸ். தள்ளிவிட்ட இடத்தில் இருந்து 70 கி.மீ., தூரத்தில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. இன்னொரு பிஞ்சின் உடல், பொள்ளாச்சி கெடிமேடு அருகே நேற்று மீட்கப்பட்டது.சம்பவம் அறிந்ததும், கோவை மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். முதல்நாள் சம்பவம் கேள்விப்பட்டதும், "பணத்துக்காக கடத்தியிருப்பர். குழந்தைகள் எப்படியும் மீட்கப்படும்' என்றுதான் எண்ணியிருந்தனர். அவர்களின் பெற்றோரைப்போலவே, கோவை மக்களும் பதைபதைத்துக் காத்திருந்தனர். ஆனால், நிதர்சனம் வேறாக இருந்தது. எவரது பிரார்த்தனையும் பலிக்கவில்லை. குழந்தைகள் இறந்தது, இறந்ததுதான்.
இறுதி ஊர்வலத்தில் இளகிய இதயங்கள்:சிறுமி முஸ்கின் சடலம் முன்னதாகவே மீட்கப்பட்டதால், நேற்று காலை முஸ்கினின் இறுதி ஊர்வலம் நடந்தது. கோவை ரங்கேகவுடர் வீதியில், முஸ்கின் குடும்பத்தினரின் வசிப்பிடத்தில் துவங்கிய இறுதி ஊர்வலம் ஒப்பணக்கார வீதி, உக்கடம், கரும்புக்கடை வழியாக ஆத்துப்பாலம் மயானத்தை சென்றடைந்தது.முஸ்கின் மரணம் கோவை மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்ததால், இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர். வழிநெடுக இருமருங்கிலும் மக்கள் திரண்டு நின்று கண்ணீருடன், முஸ்கின் சடலத்தை வழியனுப்பினர்.
வாகனங்களில் சென்றவர்கள், அலுவலகம் சென்றவர்கள் என ஊர்வலம் சென்ற வழியில் இருந்த பொதுமக்கள், முஸ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். காலை 9 மணிக்கு துவங்கிய இறுதி ஊர்வலம், மதியம் 12.40 மணி வரை நடந்தது.கண்களில் கண்ணீர் திரள பொதுமக்கள் பங்கேற்ற காட்சி, காண்போரின் உள்ளத்தை உருக்குவதாக இருந்தது. நேற்று காலை வரை முஸ்கின் சடலம் மட்டுமே கிடைத்திருந்தது. இதனால், உறவினர்கள் ரித்திக் உயிருடன் இருப்பதாகவே நம்பினர். "நிச்சயம் உயிருடன் வீடு திரும்புவான் ரித்திக்' என, உடைந்த குரலில் திரும்பத் திரும்ப கூறியபடி இருந்தனர்.குற்றவாளி மோகன்ராஜுக்கு எதிராக பொதுமக்கள் கொந்தளித்தனர். குற்றவாளியை தூக்கிலிட வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். "கோர்ட், வழக்கு என இழுத்தடிக்காமல் உடனடியாக தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும்' என, பொதுமக்கள் ஆவேசமாக கோஷமிட்டனர்.
கொடுஞ்செயலுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பொதுமக்கள் ஏந்திச் சென்றனர். "கொலை செய்வதை தவிருங்கள்; என் குழந்தை எனக்கு வேண்டும்' என்ற வாசகம் அடங்கிய பதாகை பலரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. மனித நேய மக்கள் கட்சி சார்பில், கொலைகாரனை தூக்கிலிட வலியுறுத்தி கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. மக்கள் வெள்ளத்தில் மிதந்த முஸ்கின் உடல், ஆத்துப்பாலம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
christopher - singapore,சிங்கப்பூர்
2010-11-01 05:02:06 IST
இந்தியாவில் எத்தனனை போலீஸ் station எதற்கு? கோர்ட் எதற்கு? மந்திரிகள் எதற்கு? அரசு எதற்கு? பொதுவாக எதனாலும் ஒன்றுமில்லை. மக்களை காக்க முடியாத எதனாலும் பிரயோசனம் இல்லை....
ராகவேந்திரன் கோவை - Coimbatore,இந்தியா
2010-11-01 04:19:36 IST
உடனே அந்த குற்றவாளிக்கு தண்டனை வழங்க வேண்டும்.....பொதுமக்கள் மட்டும் அல்லாமல், இந்த செய்தியைப் படிக்கும் அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள், முக்கிய பிரபலங்கள், சட்ட வல்லுனர்கள் எல்லாரும் இதற்காக குரல் கொடுக்க வேண்டும்....இனிமேல் இந்த மாதிரி குற்றம் செய்ய எந்த மனிதனும் பயப்பட வேண்டும்... முதல்வர் அவர்களே... உடனே அவனுக்கு தண்டனை கொடுக்க உத்தரவு இடுங்கள்....தயவு செய்து கோர்ட்,விசாரணை,தீர்ப்பு என்று 10 வருடம் இழுத்தடித்துவிட்டு மக்களை முட்டாளாக்காதீர்கள்.............
அஸ்வத்தாமா மதுரை - Madurai,இந்தியா
2010-11-01 04:11:05 IST
தவறுகள் கொடுமையாக இருக்கும்போது தண்டனைகளும் கடுமையாக இருக்கவேண்டும்...நமது நாட்டின் பழைய சட்டங்களை மாற்றி இன்றைய காலகட்டத்திற்கேற்ப குற்றங்களின் தன்மைகளை அறிந்து அதற்கேற்ப சட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும்...குற்றம் செய்த அந்த பாவி்க்கு பொதுமக்கள் முன்னிலையில் கொடுமையான தண்டனையை உடனே வழங்க வேண்டும்...இல்லாவிட்டால் இது போன்ற குற்றங்கள் தொடர்கதையாகி விடும்...நாம் பேசி்க் கொண்டே இருப்பதால் எதுவும் பலனில்லை...நாளை இது போன்ற சம்பவம் யார் வீட்டிலும் நடக்கலாம் .... தமிழ்நாட்டு மக்களே உடனே விழித்தெழுங்கள்....அந்த ‘‘நாய்க்கு’’ உடனே தண்டன வழங்க வேண்டும்.....தயவுசெய்து அவனை மன்னித்து பாவத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்... அந்த பிஞ்சுகளின் பாவம் நம்மை சும்மா விடாது.............
சென்னை போக்கிரி - chennai,இந்தியா
2010-11-01 03:04:57 IST
இது மிகவும் கொடுமையான செயல். தமிழகத்தை மிக்க பாதுகாப்பான இடமாக மாற்ற வேண்டும்....
ஷம்கீன் துபாய் - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-01 02:50:32 IST
அரும்புகளின் போட்டோ பார்க்க பார்க்க, கட்டுப்படுத்த முடியவில்லையே கண்ணீரை....... பெற்ற உள்ளங்கள் எப்படித்தான் தங்கிக்கொள்ளுமோ......? இறைவா கொடியவர்களிடம் இருந்து என் தேசத்தின், மொத்த உலகத்தின் குழந்தை மலர்களை காப்பாற்று......கொடியவர்களை கொன்று போட்டேனும் எங்கள் குழந்தை செல்வங்களை காப்பாற்று..........
S.Shajahan - Coimbatore,இந்தியா
2010-11-01 02:29:34 IST
Culprit must be pelted by medium size stones on roads of coimbatore by the public of city till he dies....
Manikandan - dubai,இந்தியா
2010-11-01 02:04:39 IST
"கோர்ட், வழக்கு என இழுத்தடிக்காமல் உடனடியாக தண்டனை நிறைவேற்ற வேண்டும்'...
ரமேஷ் - நியூஜெர்சி,யூ.எஸ்.ஏ
2010-11-01 01:57:29 IST
குற்றவாளியை உடனே துக்கில் போட அரசு ஆணை இட வேண்டும்...
Thakbeer ali - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-01 01:34:50 IST
இறைவா! எந்த ஒரு குடும்பத்துக்கும் இது போன்ற சோதனையை கொடுக்காதே. பச்சிளம் குழந்தையை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு யார் வந்து ஆறுதல் கொடுத்தாலும் பெத்த மனசு ஆறுதல் அடையுமா? எனது கண்களில் ரத்த கண்ணீர் வரவழைத்த மகா கொலைகாரர்களுக்கு உடனே மரண தண்டனை கொடுக்கவேண்டும்....
கோ. விஜயராஜ் - ஷிபா.ரியாத்,சவுதி அரேபியா
2010-11-01 01:10:29 IST
சவுதிஅரேபியா-வில் கொலை குற்றத்திற்கு மரணதண்டனை, அதுவூம் ஊர் அறிய தலையை வெட்டிவிடுவார்கள். அப்படி இந்த டிரைவர்களுக்கும் கொடுக்கவேண்டும் . மனித உரிமை, சட்டம் அப்படி இப்படி இன்னு டைம் ஆக்கம தண்டனையை நிறைவேற்றவேண்டும். அப்ப தான் இந்தமாதிரி தவறுகள் நடக்காமல் இருக்கும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக