செவ்வாய், 13 ஏப்ரல், 2010
மீண்டும் முந்தைய பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவே நியமிக்கப்படவுள்ளதாக
பொதுத்தேர்தலில் வெற்றியீட்டியுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வருகின்ற 21ம் திகதி புதிய அரசாங்கத்தை உருவாக்குகிறது புதிய அரசில் பிரதமர் பதவிக்கு தெரிவாகப் போகின்றவர் யார் என்று பல சர்ச்சைகள் கிளம்பியிருந்தாலும் அப்பதவிக்கு பல போட்டிகள் நிலவியிருந்தாலும் கூட மீண்டும் முந்தைய பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவே நியமிக்கப்படவுள்ளதாக தெரிகிறது. இதனையே கட்சியிலுள்ள அனைவரும் ஏற்றுக் கொள்வார்களாம் வேறு யாரையேனும் அப்பதவிக்கு நியமித்தால் கட்சிக்குள்ளே பேதம் ஏற்படும் என்பதாலேயே இந்த முடிவை ஜனாதிபதி எடுத்துள்ளாராம். புதிய பாரளுமன்றத்தில் 30-40 உறுப்பினர்கள் மட்டுமே அமைச்சர்களாக அடங்கவுள்ளனர். முன்னைய செய்தியில் புதுமுகங்களும் அமைச்சர்களாக தெரிவு செய்யப்பட உள்ளதாக தெரிவித்த போதிலும் இம்முறை பாராளுமன்றத்திற்கு புதுமுகங்களாக உள்நுழைபவர்கள் எவரும் அமைச்சர்களாகவோ பிரதி அமைச்சர்களாகவோ நியமிக்கப்பட மாட்டார்கள் எனவும் இது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷவுக்கும் பொருந்தும் என்பதும் சுட்டிக் காட்டதக்கது. ஹம்பாந்தோட்டையில் போட்டியிட்ட சிரேஷ்ட அமைச்சர்கள் அனைவரையும் நாமலுக்கே அதிக விருப்பு வாக்குகள் கிடைத்தன ஆனால் விருப்பு வாக்குகளின் எண்ணிக்கையோ அல்லது குடும்ப பின்னணியோ அமைச்சரவை நியமனத்தில் செல்வாக்கு செலுத்தாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக தெரிய வருகிறது. ஆயினும் அதிரடிக்கு கிடைத்த பிரத்தியேக தகவலின்படி பசில் ராஜபக்ச உட்பட புதுமுகங்களும் அமைச்சராக்கப்படலாம் எனத் தெரிய வருகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக