செவ்வாய், 13 ஏப்ரல், 2010
ஊர்காவற்துறையில் ஒரு கோஷ்டியினருக்கு இடையில வாள்வெட்டு
ஊர்காவற்துறையில் ஒரு கோஷ்டியினருக்கு இடையில் வாள்வெட்டு ஒன்றும் இடம்பெற்றிருக்கிறது.
ஊர்காவற்துறை கரம்பன் கிழக்கு பகுதியை சேர்ந்த வை.நிர்மலன் (வயது28) ஜே.பற்றிக் (வயது30) பி.ஜென்சிகா (வயது30) ஜெ.தயானந்தா (வயது22) ஆகியோரே குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் ஆவர் மோதலுக்கான காரணம் தெரியவராத நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். இளவாளை பத்தாவத்தை பகுதியில் நேற்றிரவு தனிமையில் வாழ்ந்து வந்த பெண்ணொருவரை வெட்டிக் கொலை செய்து விட்டு அவரிடமிருந்த பெருந்தொகையான நகையையும் பணத்தையும் கொலையாளிகள் திருடிச் சென்றுள்ளனர் 44வயதுடைய குணரத்தினம் இந்துமதி என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருக்கிறார். அலவாய் தெற்கு குமுழடியில் வாய்க்கால் பகுதி ஒன்றிலிருந்து முகத்தில் காயங்களுடன் வயோதிபர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டிருக்கிறது. அலவாய் வடக்கை சேர்ந்த 66வயதுடைய வேலுப்பிள்ளை ஆறுமுகம் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருக்கிறார் குறித்த இரண்டு சடலங்களும் யாழ் போதனா வைத்தியசாலையில் பிரேதம் பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருக்கிறது.
அத்துடன் இளவாலையில் பெண்ணொருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவமும் அலவாயில் வயோதிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவமும் யாழ்ப்பாணம் நகரத்திற்கு வெளியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக