வியாழன், 15 ஏப்ரல், 2010

ஓஷோ வேடத்தில் நடிக்க கமல்ஹாசன

இத்தாலிய இயக்குநர் அன்டோனியா லக்ஷன் சுகமேலி என்பவர் செக்ஸ் சாமியார் ஓஷோ என்கிற ரஜ்னிஷ் குறித்த படத்தை இயக்கவுள்ளார். இதில் ஓஷோ வேடத்தில் நடிக்க கமல்ஹாசன் மற்றும் சஞ்சய் தத்தை அணுகியுள்ளார்.

ஓஷோ என அவரது பக்தர்களால் அழைக்கப்பட்டவர் ரஜ்னீஷ். புனேவில் உள்ள ஆசிரமத்தில் 1990ம் ஆண்டு இவர் மரணமடைந்தார்.

செக்ஸ் சாமியார் என்றும் அழைக்கப்பட்ட ரஜ்னிஷுக்கு உலகெங்கும் ஏராளமான பின்பற்றுவோர் இன்றும் உள்ளனர்.

அப்படிப்பட்டவர்களில் ஒருவர் இத்தாலியைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் சுகமேலி. இவர் தற்போது ஓஷோ – தி பிலிம் என்ற பெயரில் திரைப்படத்தை உருவாக்கப் போகிறார். ஓஷோவின் வாழ்க்கை வரலாறாக மட்டுமல்லாமல், ஓஷோவின் தத்துவம், மகத்துவத்தை இதில் விவரிக்கப் போகிறாராம் சுகமேலி.

ஓஷோ வேடத்தில் நடிக்க தற்போது இந்தியாவில் உள்ள சில முக்கிய கலைஞர்களை அவர் பரிசீலித்துள்ளார். இறுதியில் கமல்ஹாசன் மற்றும் சஞ்சய் தத்தை இறுதி செய்துள்ளார்.

இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சில தயாரிப்பு நிறுவனங்களையும் படத் தயாரிப்புக்காக அணுகியுள்ளார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் படம் குறித்த திட்டமிடல்களைத் தொடங்கி விட்ட சுகமேலி தற்போது கலைஞர்களை இறுதி செய்யும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளார்.

தற்போது இந்தியா வந்துள்ள சுகமேலி, கமல்ஹாசன் மற்றும் சஞ்சய் தத் ஆகியோரை அணுகிப் பேசவுள்ளாராம்.


கமல் ஒரு நாத்திகர். எனவே அவர் ஓஷோவாக நடித்தால் இப்படியும் அப்படியும் விமர்சனங்கள் வரும். ஒரு கலைஞன் என்ற வகையில் கமல் என்ன வேடத்திலும் நடிக்கலாம், நடிக்கவேண்டும். கமல் என்ன செய்யப்போகிறாரோ, பார்போம்

கருத்துகள் இல்லை: