ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

நித்யானந்தா ஏராளமாக டாலர்கள் /பணம் கறந்துள்ளார். அவற்றை தனது பெயரில் அமெரிக்க வங்கியில் போட்டு

நித்யானந்தா ஆசிரமத்தில் போலீசார் சோதனை நடத்தியதில் லேப்- டாப் கம்ப்யூட்டர்கள் சிக்கின. அவை அனைத்தும் லாக் செய்யப்பட்டு இருந்தன. கம்ப்யூட்டர் நிபுணர்கள் உதவியுடன் லேப்- டாப்களை திறந்து பார்த்தனர்.

அப்போது நித்யானந்தா மீது பண மோசடி புகாருக்கான ஆதாரங்கள் சிக்கின. நித்யானந்தா தன்னிடம் ஆசி பெற வருபவர்களிடம் ஏராளமாக பணம் கறந்துள்ளார். அவற்றை தனது பெயரில் அமெரிக்க வங்கியில் போட்டு வைத்துள்ளார்.

இதில் நிறைய அன்னிய செலாவணி மோசடி நடந்துள்ளது. இது தொடர்பாக மத்திய அன்னிய செலாவணி துறைக்கு கர்நாடக போலீசார் தகவல் கொடுத்துள்ளனர்.

பெங்களூர் ஆசிரமத்தில் ஏராளமான அமெரிக்க டாலர்கள் புழக்கத்தில் இருந்துள்ளன. அவை அனைத்தும் பக்தர்கள் கொடுத்தது. அவற்றை அமெரிக்க வங்கியில் போட்டு பின்னர் இந்தியாவுக்கு பணம் பரிமாற்றம் செய்துள்ளார்.

இந்தப் பணத்தை அவர் நன் கொடையாக பெறப்பட்டது என்றும் அதற்கு வரி விலக்கு உண்டு என்றும் நித்யானந்தா போலீசாரிடம் தெரிவித்தார்.

ஆனால் நித்யானந்தா அதுபோல் அதிகாரிகளிடம் எந்த கணக்கும் காட்டவில்லை. அவர் அமெரிக்க வங்கியில் லட்சக்கணக்கில் பணம் போட்டுள்ளார். இவை அனைத்தும் அனுமதி இல்லாமல் அனுப்பப்பட்டவை. இது தொடர்பாக நித்யானந்தா மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கு தொடரப்படுகிறது.

நித்யானந்தாவை பிடதி ஆசிரமத்துக்கு நேரில் அழைத்துச் சென்று விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இன்று அல்லது நாளை அவரை பிடதிக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

நித்யானந்தாவின் போலீஸ் காவல் நாளையுடன் முடிவடைகிறது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தன் மீதான புகார்களுக்கு மவுனம் சாதிக்கிறார். இன்னும் அவரிடம் விசாரணை முழுமை பெறவில்லை. இதனால் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்பு மேலும் 4 நாட்கள் காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: