திங்கள், 26 ஏப்ரல், 2010

மதமாற்றம் செய்ய முயன்ற துணை தாசில்தார் உட்பட ஆறு பேரை பொதுமக்கள் சிறை பிடித்த சம்பவம்

ஈரோடு : ஈரோடு அருகே மதமாற்றம் செய்ய முயன்ற துணை தாசில்தார் உட்பட ஆறு பேரை பொதுமக்கள் சிறை பிடித்த சம்பவம் [^] பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு பைபிள் மாணாக்கர்கள் அமைப்பு இயங்கி வருகின்றது.

இந்த அமைப்பைச் சேர்ந்த சிலர், தனித்தனி குழுவாகப் பிரிந்து, ஈரோடு சூரியம்பாளையம் ஊராட்சி, சொட்டையம்பாளையம் பகுதியில் மதப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில், ரெவின்யூ காலனியில் வசிக்கும் கேசவன் வீட்டுக்கு நான்கு பேர் சென்று, அவரது வீட்டில் துண்டு பிரசுரத்தை கொடுத்து, அவர்களை கிறிஸ்துவ மத்திற்கு மாற வற்புறுத்தியதாக கூறப்படுகின்றது.

இந்த தகவல் அந்த பகுதி மக்களிடையே பரவ ஆசேவம் அடைந்த சிலர், மத பிரச்சாரத்தில் ஈடுபட்ட மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் நிலஎடுப்புப் பிரிவு தனி துணை தாசில்தார் ஜான்சன், திருச்செங்கோடு தனியார் பள்ளி ஆசிரியர் வெங்கடேசன் (38), வீரப்பன்சத்திரத்தில் பிசியோதெரபி கிளினிக் நடத்தி வரும் ஹென்றி மோகன்தாஸ் (65), மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த பொக்கிஷம் (61), ஹெப்சிபா (45), அண்ணா பல்கலை தொலைதூரக் கல்வி மாணவி [^] கவுசல்யா (28) ஆகியோரை சிறைப்பிடித்தனர்.

ஆனால் தாங்கள் மதம் மாறுமாறு யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர். தகவலறிந்த சித்தோடு இன்ஸ்பெக்டர் முத்துசாமி, எஸ்.ஐ. சரவணன் மற்றும் போலீசார், பொது மக்களிடம் இருந்து அவர்களை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை [^] நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: